இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலும் சாஹா இல்லை..! சென்னை வீரர் அணியில் சேர்ப்பு..! – யார் தெரியுமா..?

saha
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இந்திய அணி பங்குபெற்று விளையாடி வருகிறது. டி20 போட்டிகள் முடிந்த நிலையில் தற்போது ஒரு நாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து இங்கிலாந்து அணியுடனான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் வரும், ஆகஸ்ட் மாதம் துவங்க உள்ளது. இந்த தொடரில் விக்கெட் கீப்பராக விர்த்திமான் சாஹாவிற்கு பதில் தினேஷ் கார்திக் அணியில் இடம்பெறுவார் என்று எதிர்பாக்ர்க்க்படுகிறது.
saha
ஐபிஎல் போட்டியின் போது பெருவிரலில் காயம் ஏற்பட்டதால் அவர் இந்த தொடரில் விளையாட மாட்டார் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், டெஸ்ட் போட்டி துவங்கத்திற்கு முன்பு காயம் குணமடைந்து விர்த்திமான் சாஹா அணியில் இடம்பெறுவர் என்று எதிர்பார்க்கபட்டது. ஆனால் சமீபத்தில் வந்த தகவலின்படி அவருடைய காயம் இன்னும் மோசமானதாக இருக்கிறது .அவர் இன்னும் தனது பெருவிரலில் மிருதுவான பிளாஸ்டர் ஒன்றை அணிந்துள்ளார். தற்போது அவரால் கொஞ்சம் தான் பயிற்சியில் ஈடுபட முடிகிறது. எனவே அவர் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்க மாட்டார் என்று உறுதியாகியுள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் இந்த தொடரில் விளையாடிய புவனேஸ்வர் குமாரும் காயம் காரணமான தொடரில் இருந்து விலகிய நிலையில் தற்போது காயத்தில் இருந்து குணமடைந்து வரும் விர்த்திமன் சாஹா அணியில் மீண்டும் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கபட்ட நிலையில் தற்போது அவர் மீண்டும் அணியில் இடம்பெற போவதில்லை என்ற செய்தி இந்திய அணிக்கு மற்றுமொரு பின்னடைவாக கருதப்படுகிறது.

நிதாஸ் கோப்பை போட்டிகளிலும் ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக விளையாடி வந்த தினேஷ் கார்த்திக் இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணியில் சேர்க்கப்பட்டும் அவருக்கு வாய்ப்பளிக்கபடமால் தான் இருக்கிறது. ஏற்கனவே இந்திய அணியின் மிடில் ஆர்டரில் ரெய்னா, கே எல் ராகுல் ஹர்திக் பாண்டியா உள்ளிட்டோர் இவரது இடத்தை ஆக்கிரமித்து வரும் நிலையில், தற்போது டெஸ்ட் தொடரில் பங்கு பெரும் வாய்ப்பு தினேஷ் கார்கார்திக்கிற்கு உறுத்தியாகியுள்ளது.

- Advertisement -
Advertisement