ப்ராட்மேன் பிறந்த நாள்.! சச்சின் நெகிழ்ச்சி பதிவு.! என்ன சொன்னார் தெரியுமா.?

- Advertisement -

கிரிக்கெட் உலகின் பிதாமகனான டான் ப்ராட்மேன் பிறந்த தினமான இன்று, அவருடன் பேசிய நினைவுகளை சச்சின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உலக கிரிக்கெட்டின் பலசாதனைகளை தன் வசம் வைத்திருக்கும் ப்ராட்மேனின் 110வது பிறந்த நாள் இன்று. 1908 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27-ல் சவுத் வேல்ஸ் ஆஸ்திரேலியாவில் பிறந்த இவர் 1928 முதல் 1948 வரை கிரிக்கெட் விளையாடியுள்ளார்.

dons

- Advertisement -

1998-99 ஆண்டில் இந்திய அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அப்போது ப்ராட்மேனின் 90வது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு இந்திய அணி வீரர் சச்சின் மற்றும் ஆஸ்திரேலியா அணியின் வீரரான வார்னே ஆகிய இருவரும் கலந்துகொண்டனர். அப்போது சச்சினிடம் அதிகநேரத்தை அவர் பகிர்ந்து கொண்டு பேசி மகிழ்ந்தார்.

மேலும், ப்ராட்மேன் அவரது மனைவியை அழைத்து ஒரு முறை சச்சின் டீவியில் விளையாடுவதை காட்டியுள்ளார். அப்போது அவருடைய மனைவி யார் இவர்? உங்களை போன்று நன்றாக விளையாடுகிறார் என்று கூறியுள்ளார். அதற்கு ப்ராட்மேன் நான் இதை காண்பிக்கவே உன்னை அழைத்தேன், இவருடைய பெயர் சச்சின் டெண்டுல்கர் இந்தியாவை சேர்ந்தவர். என்று தன் மனைவியிடம் கூறி மகிழ்ந்தார்.

பிறந்த நாள் விழாவின் போது சச்சினை பார்த்து: உன்னுடைய பேட்டிங் ஸ்டைல் மற்றும் ஆடும் விதம், நிற்கும் விதம் மற்றும் ஷாட் அனைத்திலும் நான் எண்ண பார்க்கிறேன் என்று சச்சினுக்கு புகழாரம் சூட்டினார். மேலும், நான் ஆடியதை இதுவரை நான் பார்த்ததில்லை, உன்மூலமாக நான் என்னை பார்க்கிறேன் என்று கூறினார். இந்த நினைவுகளை எல்லாம் நியாபகம் வைத்து இருக்கும் சச்சின் இன்று அவருடன் எடுத்த புகைப்படத்துடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Advertisement