இங்கிலாந்து A அணியை அடித்து நொறுக்கிய இளம் அதிரடி வீரர்..! – தோனியின் அடுத்த வாரிசு ..! – யார் தெரியுமா..?

- Advertisement -

இந்திய ஏ அணி -இங்கிலாந்து- லயன்ஸ் – வெஸ்ட் இண்டீஸ் மோதும் முத்தரப்பு ஒரு நாள் போட்டிகள் நடைபெற்று வந்தது . இந்த தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில் இந்திய அணி விளையாடி வந்தது. இந்நிலையில் தொடரின் இறுதி போட்டியில் இங்கிலாந்து லயன்ஸ் அணியை வீழ்த்தி தொடரை வென்றது இந்திய அணி.

இந்த தொடரின் இறுதி போட்டி நேற்று (ஜூன் 2) லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. பின்னர், இங்கிலாந்து அணி சார்பில் முதலில் களமிறங்கிய தொடக்க ஆட்டக்காரர்களான டாம் கொஹ்லர் மற்றும் நிக் குப்பின்ஸ் சொர்ப்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதை தொடர்ந்து கைகோர்த்த சாம் ஹெய்ன் மற்றும் லிவிங்ஸ்டன் ஜோடி சிறப்பாக விளையாடினர்.

இவர்களில் இருவரில் சாம் ஹெய்ன் 108 ரன்களிலும் , லிவிங்ஸ்டன் 83 ரன்களிலும் ஆட்டமிழக்க பின்னர் வந்த எவரும் சிறப்பாக விளையாடவில்லை. இறுதியில் இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 264 ரன்களை எடுத்திருந்தனர். இந்திய அணி சார்பில் தீபக் சஹர் மற்றும் கலீம் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
pant
பின்னர் களமிறங்கிய இந்திய ஏ அணியின் பேட்ஸ்மேன்கள் அனைவரும் அவரவர் பங்கிற்கு கௌவரவமான ரன்களை குவித்து ஆட்டமிழந்தனர். பின்னர் ஒரு கட்டத்தில் ரிஷப் பண்ட் மட்டும் நிலைத்து ஆடி 62 பந்துகளில் 64 ரன்களை குவித்தார். இறுதியாக 48.2 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

- Advertisement -
Advertisement