மலைக்க வைக்கும் ரவி சாஸ்திரியின் ஆண்டு வருமானம் – இத்தனை கோடிகளா ?

ravi
- Advertisement -

இந்திய அணியின் பயிற்சியாளராக கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி நபர்களான சச்சின் கங்குலி லட்சுமண் ஆகியோரின் மூலம் பரிந்துரைக்கப்பட்டு இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி தேர்வானார்.

Ravi

- Advertisement -

2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பதவியேற்ற ரவி சாஸ்திரி வரும் 2019ம் ஆண்டு ஜூலை மாதம் வரை இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்க ஒப்பந்தம் உள்ளது. இந்த ஒப்பந்தத்தினை அடுத்து ரவி சாஸ்திரி அணியின் பயிற்சியாளராக நீடிப்பாரா ? என்ற கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது.

ரவி சாஸ்திரி சிறப்பாக செயல்பட்டுவருவதால் அவர் உலகக்கோப்பை பின்பும் இந்திய அணியின் பயிற்சியாளராக நீடிப்பார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி பெரும் சம்பளம் இப்போது வெளிவந்துள்ளது. அதன்படி ரவி சாஸ்திரி இந்திய மதிப்பில் சுமார் 8 கோடி ஆண்டுக்கு சம்பளமாக பெறுகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ravi koli

மேலும், வெளிநாடுகளில் நடைபெறும் தொடருக்கான விமானம், ஹோட்டல், உணவு மற்றும் ஷாப்பிங் என இவரது அனைத்து செலவும் இந்திய அணியே செய்கிறது. இது இந்தியாவில் நடைபெறும் போட்டிக்கும் பொருந்தும். இதற்கு முன்னர் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த கும்ப்ளே 6.5 கோடி வரை ஆண்டு சம்பளமாக பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement