வெற்றிக்கு காரணமாக இருந்த அந்த 36 எக்ஸ்டராஸ்…!காரணமும் அசத்தல் நாயகன் புஜாராதான்…!

Pujara
- Advertisement -

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள், 4 டெஸ்ட் போட்டிகள், மூன்று டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் டி 20 தொடர் 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிந்த நிலையில் டெஸ்ட் தொடர் துவங்கியது.

முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, அடிலெய்டில் நடந்து வந்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 250 ரன்கள் எடுத்தது. புஜாரா 123 ரன்கள் எடுத்தார். பின்னர் தனது முதல் இன்னிங்சை துவங்கிய ஆஸ்தி ரேலிய அணி 235 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. அஸ்வின், பும்ரா தலா 3 விக்கெட்டை வீழ்த்தினர்.

- Advertisement -

அடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 307 ரன் எடுத்தது. புஜாரா 71 ரன்களும் ரஹானே 70 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் நாதன் லியான் 6 விக்கெட் வீழ்த்தினார். இந்திய அணி 323 ரன் முன்னிலை பெற்றிருந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.நான்காம் நாளான நேற்று அந்த அணி 4 விக்கெட் இழப்புக்கு 104 ரன்கள் எடுத்திருந்தது

கடைசி நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. 323 ரன் என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதையடுத்து 31 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி சாதனை வெற்றி பெற்றது. இந்திய தரப்பில் அஸ்வின், பும்ரா, ஷமி தலா 3 விக்கெட்டும் இஷாந்த் சர்மா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

- Advertisement -

இந்திய அணி 12 வது முறையாக ஆஸ்திரேலியாவில் இப்போது சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இதற்கு முன் வந்த 11 முறையும், முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதில்லை. இப்போது அந்த வரலாற்றை மாற்றி வெற்றியுடன் இந்த தொடரைத் தொடங்கியுள்ளது இந்திய அணி. ஆட்ட நாயகன் விருது புஜாராவுக்கு வழங்கப்பட்டது.

இந்த வெற்றிக்கு முழு காரணமாக விராட் கோலியும் புஜாராவை புகழந்து தள்ளினார். ஆனால், புஜாரவின் தாக்கத்தை அவர் அடித்த 194 (123, 71) ரன்களை மட்டும் வைத்துக் கணக்கிடக் கூடாது. புஜாரா இந்தியாவின் வெற்றிக்குக் காரணமாக இருந்தது, அந்த ரன்களினால் அல்ல. அவர் சந்தித்த 450 பந்துகளினால்! 

புஜாராவின் நிலையானஆட்டத்தால் ஆஸி பல பந்து ்வீச்சாளர்களைமாறிமாறி களத்தில் இறக்கியது .அதன்விளைவு
முதல் இன்னிங்ஸில் வெறும் 1 எக்ஸ்ட்ரா மட்டுமே கொடுத்திருந்த ஆஸி பௌலர்கள், இரண்டாவது இன்னிங்ஸில் கொடுத்தது 36 உதிரி ரன்கள். அதில் பெரும்பாலானவை ஸ்டார்க் வீசிய bye மூலம் பௌண்டரிகளானதால் வந்தவை. மற்றவை, லெக் சைட் வீசப்பட்ட பந்துகளால் கிடைத்த `லெக் பை’ ரன்கள். புஜாரா, ரஹானே தவிர, இந்தியாவுக்கு அதிகமாகப் பங்களித்தது என்னவோ அந்த உதிரிகள்தான். ஆஸ்திரேலியாவுக்கும் வெற்றிக்கும் இடையே இருந்தது 31 ரன்கள்த்திருந்த ஆஸி பௌலர்கள், இரண்டாவது இன்னிங்ஸில் கொடுத்தது 36 உதிரி ரன்கள். அதில் பெரும்பாலானவை ஸ்டார்க் வீசிய bye மூலம் பௌண்டரிகளானதால் வந்தவை. மற்றவை, லெக் சைட் வீசப்பட்ட பந்துகளால் கிடைத்த `லெக் பை’ ரன்கள். புஜாரா, ரஹானே தவிர, இந்தியாவுக்கு அதிகமாகப் பங்களித்தது என்னவோ அந்த உதிரிகள்தான். ஆஸ்திரேலியாவுக்கும் வெற்றிக்கும் இடையே இருந்தது 31 ரன்கள் தான். 

Advertisement