தோனி அடித்த ஹெலிகாப்டரை பார்த்த சக வீரர்களின் ரியாக்சன் என்ன தெரியுமா ? – புகைப்படம் உள்ளே

Dhoni
- Advertisement -

இன்னும் நான்கு நாட்களில் இந்தியாவின் பெரும் கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடர் ஆரம்பமாக உள்ளது. இந்த 12வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

VK and MS

- Advertisement -

இதற்காக சென்னை அணி வீரர்கள் சில நாட்களாகவே சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர் தினமும் சென்னை அணி வீரர்கள் செய்யும் பயிற்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

அது போன்று நேற்று தோனி பயிற்சி போட்டியில் அடித்த ஒரு சிக்ஸரை சென்னை அணி வீரர்களே வியந்து பார்த்தனர். அந்த ஷாட்டை அனைவரும் அவ்வளவு ஆச்சரியத்துடன் வாயை பிளந்து பார்த்தனர். இதோ அந்த புகைப்படம் :

MS

23ம் தேதி நடைபெற உள்ள இந்த முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை 16ஆம் தேதி துவங்கி சில மணி நேரங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தது குறிப்பிடத்தக்கது. அந்த அளவிற்கு இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு உள்ளது.

Advertisement