மும்பை அணி பயிற்சியாளரிடம் பயிற்சி பெற்ற டெல்லி அணி வீரர் – வீடியோ

Pant
- Advertisement -

டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் இளம் அதிரடி வீரரும் விக்கெட் கீப்பருமான பண்ட் மும்பை அணி பயிற்சியாளரிடம் பயிற்சி பெற்ற இந்த நிகழ்வினை மும்பை இந்தியன்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதோ அந்த வீடியோ:

- Advertisement -

இந்த தொடருக்காக பயிற்சி எடுத்துவரும் மும்பை மற்றும் டெல்லி அணி வீரர்கள் மும்பை வான்கடே மைதானத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்நிலையில் மும்பை அணிக்கு பீல்டிங் ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகள் கொடுத்துவரும் கிரண் மோரே டெல்லி அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்டிற்கு கீப்பிங் ஆலோசனைகளை வழங்கினார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் எதிரணி வீரர் என்று பாராமல் அவருக்கும் பயிற்சியினை வழங்கி, ஆலோசனைகளை கொடுத்த கிரண் மோரேவை ரசிகர்கள் இணையத்தில் வாழ்த்தி வருகின்றனர். மேலும், பண்ட்டின் இந்த ஆர்வத்தை வெகுவாக வரவேற்றனர் என்பது குறிப்பிடக்கத்து.

pant

இந்த ஆண்டு 12ஆவது ஐ.பி.எல் போட்டித்தொடர் நாளை மாலை முதல் துவங்க உள்ளது. முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்க உள்ளது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement