ஐபிஎல் அதிரடியாக ஆடிய ரிஷப் பண்ட்..! இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்காமல் புறக்கணிக்கும் பிசிசிஐ..! காரணம் இதுதான்..?

- Advertisement -

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணியில் விளையாடிய ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி 684 ரன்களை எடுத்தார். மேலும், இவரது பேட்டிங் சராசரி 173.60 ஆக இருந்தது. ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடிய இவர் சமீபத்தில் நடைபெற்ற இயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் கூட இடம்பெறவில்லை .இதனால் சிறப்பான ஒரு வீரருக்கு அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது விவாதத்திற்கு உள்ளானது.
rishab_pant
சரி இயர்லாந்து அணிக்கு எதிராண போட்டியில் தான் இவர் சேர்க்கப்படவில்லை இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலாவது சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கபட்டு வந்த நிலையில், இந்த தொடரிலும் அவரது பெயர் அணியில் இடம்பெறாதது ஏன் என்ற கேள்வி எழும்புகிறது. எனவே, இவருக்கு இந்திய அணியில் வேண்டுமென்றே வாய்ப்பு மறுக்கப்படுகிறதா என்ற எண்ணமும் எழுகிறது.

அதே போல இந்திய ஏ அணி -இங்கிலாந்து- லயன்ஸ் – வெஸ்ட் இண்டீஸ் மோதும் முத்தரப்பு ஒரு நாள் போட்டிகள் நடைபெற்று வந்தது . இந்த தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில் இந்திய அணி விளையாடி வந்தது. இந்நிலையில் தொடரின் இறுதி போட்டியில் இங்கிலாந்து லயன்ஸ் அணியை வீழ்த்தி தொடரை வென்றது இந்திய அணி.இந்த போட்டியில் ரிஷப் பண்ட் 62 பந்துகளில் 64 ரன்களை எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.
pant
இந்த தொடரில் ரிஷப் பண்ட் அற்புதமாக விளையாடினார். அதனால் இங்கிலாந்து மண்ணில் விளையாடிய அனுபவதோடு நல்ல பார்மில் இருந்து வந்தார். ஆனால், இங்கிலாந்து அணியுடனான தொடரில் இவர் இந்திய அணியில் இடம்பெறாதது இவருக்கு நேர்ந்த துரதிர்ஷ்டம் என்று தான் கூற வேண்டும். இருப்பினும் இந்திய ஏ அணியில் நல்ல பார்மில் இருக்கும் பண்ட்டிற்கு தற்போது இங்கிலாந்து ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை மீண்டும் பயன்படுத்தி இந்திய வாரியத்தின் தேர்வாணியாளர்களின் கவனத்தை ஈர்த்து இந்திய அணியில் விரைவில் இடம்பெருவார் என்று நம்பப்படுகிறது.

- Advertisement -
Advertisement