அடுத்த போட்டிக்கான அணியின் திட்டம் இதுவாக தான் இருக்க வேண்டும்.! சேவாக் கோரிக்கை.!

- Advertisement -

விராட் கோலி தலைமையில் இந்திய அணி 38டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 22போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. இருந்தாலும் ஒரு போட்டியில் ஆடிய அணி அடுத்த போட்டியில் ஆடுவதில்லை. 38 போட்டிகளிலும் 38 மாற்றங்களை கோலி செய்துள்ளார். இருந்தாலும் அணியின் நலன் கருதி அணி நிர்வாகமும் அதற்கு சம்மதம் தெரிவிக்கின்றன.

ind1

- Advertisement -

தற்போது நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் கூட 3 போட்டியிலும் கோலி மாற்றங்களை செய்துள்ளார். இருப்பினும் 3வது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அணைத்து வீரர்களும் சிறப்பாக விளையாடினார்கள். பந்துவீச்சு முழுமையான பலத்துடன் இருந்தது. பேட்டிங்கிலும் மிடில் ஆர்டர் கைகொடுத்தது.

எனவே, வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி நடைபெற உள்ள 4வது போட்டியில் இந்திய அணி எந்த மாற்றங்களையும் செய்யாமல் அதே அணியுடன் விளையாட வேண்டும். என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இந்திய அணியின் கடைசி ஆட்டத்தில் எல்லா கட்டத்திலும் இந்திய அணி வலுவாக இருந்தது. எனவே, அதே அணியுடன் இந்த போட்டியில் விளையாடினால் அடுத்த வெற்றி இந்திய அணி தொடரை சமன் செய்ய பிரமதமான வாய்ப்புள்ளது.

ind

அணியில் அடிக்கடி மாற்றங்களை செய்தால் அது அணியின் சமநிலையை பாதிக்கும் என்றும் சேவாக் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, இந்த கருத்தினை இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜனும் கூறி இருந்தார். இருந்தாலும், அடுத்த போட்டிக்கான முடிவு கேப்டன் கோலி எவ்வாறு எடுப்பார் என்பது நாம் கூற இயலாது. இருந்தாலும் அவர் சரியான முடிவினை எடுப்பார் என்று நம்பலாம்.

Advertisement