சிறுபிள்ளை தனமான விளையாட்டு.! இந்திய அணியை பழித்த இங்கிலாந்து வீரர்.!

- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வினின் சிறப்பான பந்துவீச்சு, விராட் கோலியின் அபாரமான சதம் என்று இருந்தும் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் மோசமான ஆட்டத்தில் படு தோல்வியடைந்தது. அதே போல இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வியடைந்து ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் இந்திய அணியின் இந்த தொடர் தோல்வி குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் நாசர் ஹுசைன் விமர்சித்துள்ளார்.

nasar

- Advertisement -

இந்திய அணியின் படு தோல்வி குறித்து சமீபத்தில் விமர்சித்துள்ள நாசர் ஹுசைன் “இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் உலக அளவில் முதல் இடத்தில இருக்கிறது. எனவே, அந்த அணி இன்னும் சிறப்பாக விளையாடும் என்று எதிர்பார்த்தேன். இங்கிலாந்து அணிதான் உலகிலேயே சிறந்தது என்று பல முறை நிரூபித்துள்ளது. ஆனால், இந்தியாவின் தோல்வியை பற்றிதான் குறிப்பிட வேண்டியுள்ளது. வரும் போட்டியாலாவது தங்கள் அணியை தோல்வி பெறாமல் இந்திய அணி பார்த்துக்கொள்ள வேண்டும்.

உலகின் நம்பர் ஒன் அணியாக இருக்கும் இந்திய அணியுடன் இங்கிலாந்து அணி விளையாடம் போது அது மிகவும் போட்டி நிறைந்ததாக இருக்க வேண்டும் இல்லையா. ஆனால், தற்போது சிறுவர்களுக்கும், அனுபவமிக்க இளைஞர்களுக்கும் இடையேயான விளையாட்டை போல இந்த தொடர் உள்ளது. இந்தியர்களில் பாதை தவறான திசையில் சென்று கொண்டிருக்கிறது. இன்னும் இந்திய அணியில் சிறப்பான ஆட்டக்காரர்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளனர் அவர்களை பயன்படுத்த வேண்டும். விராட் கோலிக்கு காயம் ஏற்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது ” என்று கூறியுள்ளார்.

nasar 2

அதே போல சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இந்திய அணியின் முதல் டெஸ்ட் தோல்விக்கு கோலி செய்த தவறு தான் காரணம் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் ஏற்கனவே விமர்சித்திருந்தார். ஏற்கனவே இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. எனவே, வரவிருக்கும் மூன்று போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்றால் தான் தொடரை கைபற்ற முடியும். இந்நிலையில் கோலிக்கு தற்போது ஏற்பட்டுள்ள முதுகு வலியால், அவரால் வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாட முடியுமா என்ற சந்தேகம் எழுந்தள்ளது.

Advertisement