வீரர்களிடம் நல்ல பண்பு வேண்டும்..! இது நியாயமா ரசிகர்களே..! கைப் & அக்தர் பாய்ச்சல்..! – காரணம் இதுதான்..?

kaif
- Advertisement -

கிரிக்கெட் உலகல் இந்திய கிரிக்கெட் அணி மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி எதிரும் புதிருமாக தான் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இருப்பினும் இரு நாட்டு வீரர்களும் ஒருவரை ஒருவர் பாராட்டி வருவது நல்ல விடயமாக தெரிந்தாலும் சிலருக்கு அது தேச துரோக குற்றமாக தெரிகிறது.


சில நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தான் அணி, ஆஸ்திரேலியா, ஜிம்பாபே அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒரு நாள் தொடரில் விளையாடி வந்தது. இந்த தொடரின் இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணியயை எதிர்கொண்ட பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று முத்தரப்பு தொடரை கை பற்றியது. பாகிஸ்தான் அணியின் இந்த வெற்றியை பாராட்டி இந்திய அணியின் முன்னாள் வீரர் மொஹமத் கைப் தனது ட்விட்டவ் பக்கத்தில் வாழ்த்துகளை தெறிவி த்திருந்தார்.

- Advertisement -

அதே போல இங்கிலாந்து நாட்டிற்கு டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி20 தொடர்களில் பங்குபெற சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை கை பற்றியது. இதற்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேக பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் இந்திய அணியின் வெற்றிக்கு வாழ்த்துக்கள் கூறியதோடு சிறப்பாக விளையாடிய ரோஹித் சர்மாவிற்கும் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். என்னதான் இந்த இரு அணிக்கு இடையே பல கருத்து வ்வ்றுபாடு நிலவினாலும் இரு அணி வீரர்களும் ஒருவரை ஒருவர் பாராட்டியது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை தந்தது.


இருப்பினும் இந்த இரு அணி வீர்க்ர்களும் வேறு ஒரு அணியின் வெற்றியை பாரட்டியதற்கு ஒரு சில எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. பாகிஸ்தான் அணியை பாராட்டிய கைஃப்பை தேச துரோகி என்றும், பாகிஸ்தான் நாட்டிற்கே சென்று விடுங்கள் என்றும் சிலர் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். அதே போல இந்திய வீரர் ரோஹித் ஷர்மாவை பாராட்டிய ஷோயிப் அக்தரை,பாகிஸ்தான் அணியில் சிறப்பாக விளையாடிய ப்ஃக்கர் ஜமாமை ஏன் பாராட்டவில்லை என்று சில பாகிஸ்தான் ரசிகர்களும் ட்விட்டரில் கேள்வி எழுப்பி வருக்கின்றனர்.

Advertisement