35 பந்துகளில் சதம்..! 12 பவுண்டரி, 7 சிக்ஸர்.! அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய குப்தில்.!

Martin-Guptill-1
- Advertisement -

இங்கிலாந்தில் 2018 ஆம் ஆண்டிற்கான டி20 பிளாஸ்ட தொடர் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து உள்ளூர் வீரர்கள் பங்கேற்று விளையாடும் இந்த தொடரில் பல்வேறு சர்வதேச கிரிக்கெட் வீரர்களும் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்த தொடரில் நியூஸிலாந்து அணியின் வீரர் மார்ட்டின் குப்தில் அதிவிரைவாக சதமடித்து அசத்தியுள்ளார்.

martin

நியூஸிலாந்து வீரான மார்ட்டின் குப்தில் இந்த தொடரில் வோர்செஸ்டர்ஷையர் அணியில் விளையாடி வருகிறார். இந்நிலையில் நேற்று (ஜூலை 27) நார்த்தாம்டன் நகரில் உள்ள கவுண்டி மைதானத்தில் வோர்செஸ்டர்ஷையர் அணி, நார்த்தாம்டன்ஷையர் அணியை எதிகொண்டது. இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய நார்த்தாம்டன் அணி 20 ஓவர்களில் 187 ரன்களை குவித்தது.

- Advertisement -

பின்னர் 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய வோர்செஸ்டர்ஷையர் அணியில் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய குப்தில் அதிரடியா விளையாட துவங்கினார். நார்த்தாம்டன்ஷையர் அணியின் பந்துவீச்சை சிதறடித்து குப்தில் 35 பந்துகளில் தனது சதத்தை பூர்த்தி செய்தார். பின்னர் 38 பந்துகளில் 102 குவிந்திருந்த போது ஆட்டமிழந்தார்.

guptill

இந்த அதன் பின்னர் ஜோடி சேர்ந்த கிளார்க் மற்றும் ட்ரவிஸ் ஹெட் ஜோடி சீராக விளையாடி வோர்செஸ்டர்ஷையர் அணியை வெற்றிபெற செய்த்தனர். இந்த போட்டியில் 35 பந்துகளில் 100 ரன்னை குவித்த மார்ட்டின் குப்தில் டி20 போட்டியில் குறைந்த பந்துகளில் சதமடித்த வீரர் பட்டியலில் இடம் பிடித்தார். இந்த பட்டியலில் முதல் இடத்தில் உள்ள மேற்கிந்திய அணியின் கெய்ல் கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் 30 பந்துகளில் சதமடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement