சச்சின் போன்று கிரிக்கெட் ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பை இவரிடம் மட்டுமே நான் பார்க்கிறேன்.! ரவி சாஸ்திரி பேட்டி

ravi
- Advertisement -

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தற்போது டெஸ்ட் பேட்ஸ்மேன் லிஸ்டில் முதலிடத்தில் உள்ளார். 938புள்ளிகளுடன் உள்ளார். மேலும், இதுவே அவருடைய அதிகபட்ச புள்ளிகள் ஆகும். இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் விராட் கோலியை சச்சினுடன் ஒப்பிட்டுள்ளார்.

koli kiss

- Advertisement -

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் கிரிக்கெட் ஆர்வம் மற்றும் அவருடைய அர்ப்பணிப்பு அப்படியே சச்சினை போன்றுள்ளது. சச்சின் விளையாட்டில் காட்டும் ஈடுபாடு அப்படியே கோலி இடம் உள்ளது. மேலும் கோலியிடம் உள்ள போர்க்குணம் நாம் அறிந்ததே.

பொதுவாகவே கோலி தோல்வியை விரும்பாதவர் அக்ரோஷமாக விளையாடி ஆட்டத்தினை வெற்றியுடன் முடிக்கவே அவர் அதிகம் விரும்புவார். தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து தொடரில் கூட அவருடைய வெற்றிக்கான கவனம் சிதறவில்லை.

முதல் இரு டெஸ்ட் போட்டியிலும் தோல்வியடைந்து பரிதவித்த நிலையில், தனது சிறப்பான பேட்டிங் மற்றும் கேப்டன்சியாலும் மூன்றாவது போட்டியை வென்று மீண்டும் நம்பிக்கையை வரவைத்தார். மேலும் கோலி திட்டமிடுதலில் கில்லாடி.

ravi koli 2

இது போன்ற காரணம் கோலியை சிறப்பான ஒரு வீரராக மாற்றியுள்ளது. தற்போது உள்ள பேட்ஸ்மேன்களில் விராட் கோலி தலைசிறந்த பேட்ஸ்மேன் என்பதில் மாற்றுக்கருத்திருக்கு இடமில்லை. சச்சினை போன்று ஆட்டத்தில் ஈடுபடும், அர்ப்பணிப்பும் கோலியிடம் மட்டுமே நான் பார்க்கிறேன் என்று ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

Advertisement