கேப்டனாக தோனியை பின்னுக்கு தள்ளினார் கோலி.! ஆம் இப்போது இவர்தான் நம்பர் 1.!

dhoni
- Advertisement -

இந்திய அணி 3வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் 352 ரன்களுக்கு தனது இன்னிங்க்ஸை டிக்ளேர் செய்தது. இதனால் இங்கிலாந்து அணிக்கு 521 ரன்கள் என்ற கடினமான இலக்கு நிர்ணயிக்க பட்டுள்ளது. இந்த போட்டியில் கிட்டத்தட்ட இந்திய அணி வெற்றியை நெருங்கி விட்டது. ஏனென்றால், இந்த டெஸ்ட் போட்டி முடிவடைய இன்னும் 2 நாட்கள் உள்ளன. எனவே இந்திய அணி இங்கிலாந்து அணியின் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ko 2

- Advertisement -

இந்நிலையில், 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 97 ரன்கள் எடுத்து அரை சதத்தை கடந்த கேப்டன் விராட் கோலி சதமடிக்க தவறினார். தற்போது அவர் இரண்டாவது இன்னிங்சில் சதமடித்து அசத்தியுள்ளார். இதன் மூலம் அவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. மேலும் அவர் சத்தமில்லாமல் பல சாதனைகளுக்கு சொந்தகாரர் ஆகிவருகிறார்.

ஆம், இரண்டாவது இன்னிங்சில் அவர் அடித்த 103 ரன்கள் மூலம் ஒரு டெஸ்ட் போட்டியில் இரு இன்னிங்சிலும் 50 ரன்களுக்கு மேல் “9 முறை” அடித்துள்ளார். கேப்டனாக அவர் இரண்டு இன்னிங்சிலும் “5 முறை” 50ரன்களுக்கு
மேல் அடித்து இதற்கு முன் இருந்த தோனியின் சாதனையை அவர் தகர்த்துள்ளார். டோனி டெஸ்ட் போட்டியில் கேப்டனாக “4 முறை” இரண்டு இன்னிங்சிலும் 50 ரன்களுக்கு மேல் அடித்ததே இதுவரை முதலிடத்தில் இருந்தது.

kohli dhoni

இதற்குமேல் பல சாதனைகளை செய்து துவம்சம் செய்ய காத்திருக்கிறார் கேப்டன் கோலி. இந்திய அணியின் முன்னாள் வீரரான டிராவிட் டெஸ்ட் போட்டியின் இரெண்டு இன்னிங்சிலும் “10 முறை” 50 ரன்களுக்கு மேல் அடித்து முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கோலி இவரது சாதனையை அடுத்த போட்டியில் சமன் செய்வாரா.?

Advertisement