தோனியை ஓரங்ககட்டிய கோலி..! ரிக்கி பாண்டிங்கையும் விரட்டியடித்தார்..! – கேப்டன்ஷிப்பில் கோலி புதிய சாதனை..!

virat
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியில் தோனி மற்றும் கோலி ஒரு ஒப்பற்ற கேப்டன்களாக விளங்கி வருகின்றனர். தோனிக்கு பிறகு இந்திய அணியை சிறப்பாக வழி நடத்தி வருகிறார் கோலி. இவர்களது இருவரின் கேப்டன் திறன் குறித்து பல்வேறு ஜாம்பவங்ககளும் புகழாரம் சூடி வருகின்றனர். தோனி கூல் கேப்டன் என்றால், கோலியின் கேப்டன்ஷிப் கொஞ்சம் ஆக்ரோசம் தான்.
virat kohli
இந்நிலையில் இந்திய அணியின் தற்போதைய கேப்டனாக விளங்கி வரும் கோலி இந்திய அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த தோனி செய்யமுடியாத ஒரு சாதனனையை படைத்துள்ளார். இந்திய அணி, தற்போது கோலி தலைமயில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இந்த தொடரில் முதல் போட்டி நேற்று (ஜுலை 12) நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி பெற்ற வெற்றி மூலம் 50 ஒரு நாள் போட்டியில் அதிக வெற்றிகளை பெற்ற முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார் கோலி. இதுவரை 50 ஒரு நாள் போட்டிகளை தலைமையேற்று நடத்தியுள்ள கோலி 39 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார்.

இதற்கு முன்பாக மேற்கிந்திய அணியின் முன்னாள் கேப்டன் கிளைவ் லாயிட் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் ஆகியோர் 50 ஒரு நாள் போட்டியில் விளையாடி 39 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர். தற்போது இந்த சாதனையில் கோலியும் இணைந்துள்ளார். இந்த சாதனையை கோலியின் சீனியர் வீரான தோனி கூட செய்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Advertisement