எதிரணி பேட்ஸ்மேனுக்கு ‘டிப்ஸ்’ கொடுத்த கோலி..! கோலிக்கு குவியும் பாராட்டுக்கள்

Kohli
- Advertisement -

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் பங்கேற்றது. இதையடுத்து வரும் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி துவங்க உள்ள 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்கு முன்னதாக இங்கிலாந்து உள்ளூர் அணியான எசெக்ஸ் அணியுடனான டெஸ்ட் போட்டியில் பங்கேற்றது.

https://twitter.com/BCCI/status/1022759250106310656[/embed ]

- Advertisement -

கடந்த ஜூலை 25 ஆம் தேதி நடந்த இந்த டெஸ்ட் போட்டி சில பல காரணங்களால் 3 நாள் கொண்ட டெஸ்ட் போட்டியாக மாற்றப்பட்டது. இந்த போட்டியின் போது இங்கிலாந்து எசெக்ஸ் அணியின் கேப்டன் வருண் சோப்ரா எதிரணி வீரர் என்றும் பாராமல் பேட்டிங் டிப்ஸ் வழங்கிய கோலிக்கு பாராட்டுகள் குவிந்து வண்ணம் இருக்கிறது.

மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 395 ரன்களுக்கு அணைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் களமிறங்கிய எசெக்ஸ் அணி 359 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. இதைத்தொடர்ந்து விளையாடிய இந்திய மூன்றாம் நாள் முடிவில் 89-2 என்ற நிலையில் இருந்த நிலையில் மழை குறிக்கிட்டதால் போட்டி டிராவில் முடிந்தது.

Kholi-crickter

இதற்கிடையே இந்த போட்டியின் போது இந்திய கேப்டன் விராட் கோலியிடம் பேட்டிங் குறித்து சந்தேகங்களை எசெக்ஸ் அணியின் கேப்டன் வருண் சோப்ரா கேட்டு வந்துள்ளார். இதுகுறித்து தெரிவித்துள்ள வருண் சோப்ரா “விராட் கோலியிடம் பேட்டிங் உள்ளிட்ட பல உத்திகள் குறித்து கேட்டறிந்தேன். அவர் எனக்கு பல பேட்டிங் டிப்ஸ்களை வழங்கினார். இந்திய அணியின் முன்னணி வீரர்களுடன் விளையாடியது ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.எதிரணி என்றும் பாராமல் விராட் கோலி செய்த இந்த செயலை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

Advertisement