ஐ.பி.எல் போட்டிகள் துவங்கும்போது நான் சிறுவனாக மைதானத்தில் போட்டியை ரசித்தேன் – ராகுல் பேட்டி

Ipl cup
- Advertisement -

இந்தியாவில் 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரான ஐபில் இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பி.சி.சி.ஐ மூலம் 2008 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. அதிலிருந்து ஆண்டுதோறும் நடைபெறும் இந்த கிரிக்கெட் தொடர் இந்த ஆண்டோடு 12 ஆம் ஆண்டை எட்டியுள்ளது. இந்த தொடரின் வரவேற்பு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து கொண்டே வருகிறது.

Ipl opening

- Advertisement -

இந்நிலையில் ஐபில் போட்டிகள் துவக்க காலத்தை பற்றி இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரரான கே.எல் ராகுல் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் ராகுல் கூறியதாவது : இந்தியாவில் ஐபில் போட்டிகள் துவங்கும்போது எனக்கு 16 வயது பெங்களுருவில் நடைபெற்ற முதல் போட்டியில் கொல்கத்தா அணி வீரரான ப்ரெண்டன் மெக்குல்லம் அடித்த 158 ரன்களை மைதானத்தில் ரசிகர்களோடு ரசிகராக நான் பார்த்தேன். அப்போது நான் பள்ளியில் படித்து கொண்டிருந்தேன்.

அதன்பிறகு, படிப்படியாக கிரிக்கெட் விளையாடி இன்று இந்திய தேசிய அணியில் இடம் பிடித்து விளையாடி வருகிறேன். அன்று பெங்களூரு மைதானத்தில் போட்டியை ரசித்து கொண்டிருந்த நான் இன்று பெங்களுருவில் போட்டிகளை விளையாடி கொண்டிருக்கிறேன் என்று தனது இந்த கிரிக்கெட் பயணத்தை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.

rahul

ராகுல் தற்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வருடம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கும் முதல் போட்டியில் சென்னை அணி மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் மோத உள்ளன.

Advertisement