சாதனை நாயகன்.! சதமடிக்கும் இயந்திரம்.! அடுத்த போட்டியிலும் சதம் அடிப்பார்.! ரசிகர்கள் ஆரவாரம்

king
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 352 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் டிக்ளர் செய்தது. எனவே, இங்கிலாந்து அணிக்கு 521 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்கு நிர்ணயிக்க பட்டுள்ளது. மேலும், சாதனைகளின் நாயகன் கோலி நேற்று மீண்டும் ஒரு சாதனையை நிகழ்த்தினார்.

ko1

- Advertisement -

நேற்றைய, இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்சில் கிங் கோலி சிறப்பாக விளையாடி டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் தனது 23வது சதத்தை அடித்தார். மற்றும் அணியின் கேப்டனாக அவர் அடிக்கும் 16வது சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. கேப்டனாக க்ரீம் ஸ்மித் (25), ரிக்கி பாண்டிங் (19) ஆகியோர்க்கு அடுத்து இந்திய அணியின் கேப்டன் கோலி (16) சதம் அடித்து மூன்றாவது இடத்தில் உள்ளார்.

மேலும், இந்த தொடருக்கு முன் கோலி இங்கிலாந்து மண்ணில் சதம் அடித்தது இல்லை. எனவே இந்த முறையும் கோலி இங்கிலாந்து மண்ணில் சோடை போவார் என்று இங்கிலாந்து ஊடகங்கள் வர்ணித்த நிலையில், 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியிலே இவர் 2 சத்தங்களை விளாசி உள்ளார். மேலும் இரு டெஸ்ட் போட்டிகள் உள்ளன.

ko

கோலி தற்போது தனது சிறப்பான பார்மில் உள்ளார். எனவே, அவர் அடுத்த போட்டியிலும் சதம் நிச்சயமாக அடிப்பார் என்று அவருடைய ரசிகர்கள் வலை தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் கோலி 97 ரன்கள் எடுத்து 3 ரன்கள் வித்தியாசத்தில் தனது சதத்தை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement