ஒரு போஸ்டிற்க்கு ரூ.82.45.! சர்வதேச அளவில் 17-வது இடம்.! கோலி அதிரடி.!

kohli
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியில் இருப்பவர்களில் விராட் கோலி கோடி கணக்கில் சம்பாதித்து கொண்டிருக்கிறார் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை. கிரிக்கெட்டில் சம்பாதிப்பதை விட விராட் கோலி விளம்பரங்கள் மூலமும், தனது பிரபலத்தை பயன்படுத்தியும் அதிகம் சம்பாதிக்கிறார். ஆனால், அவர் இன்ஸ்டாகிராம் பக்கம் மூலமும் சம்பாதிக்கிறார் என்ற விடயம் கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் உள்ளது.

kholifunny

விராட் கோலி அதிக ரசிகர்கள் கொண்ட இந்திய வீரர்களில் ஒரு முக்கியமான நபர். இவரது பிரபலத்தை பறைசாற்றும் வகையில் சமீபத்தில் இவருக்கு டெல்லியில் உள்ள அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை கூட அமைக்கப்பட்டது. பொது ரசிகர்களை தாண்டி சமூக வலைத்தளத்திலும் கோலி அதிக ரசிகர்கள் கொண்ட கிரிக்கெட் வீரராக இருந்து வருகிறார்.

- Advertisement -

சமீப காலமாக கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை தான் அதிகம் பயன்படுத்தி வருகிறார், இதுவரை 440 பதிவுகளுக்கு மேல் பதிவிட்டுள்ளார். மேலும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை 16.7 மில்லியன் ரசிகர்கள் இவரை பின் தொடர்ந்து வருகிறார்கள். சமீபத்தில் ஹோப்பர் ஹெச்கியூ டாட் காம் என்ற இணையதளம் ஒன்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஒரு போஸ்டிற்காக நட்சத்திரங்கள் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்பது குறித்த பட்டியலை வெளியிட்டனர்.

kholi

அதில் இந்திய அணியின் கோலி 17 வது இடத்தில் இருக்கிறார்.கோலி பதிவிடும் ஒரு இன்ஸ்டாகிராம் பதிவில் விளம்பரத்தின் மூலம் சுமார் 82.45 லட்சம் லாபம் ஈட்டுகிறார் என்று அந்த இணைய தளத்தில் தெரிவிக்கப்ட்டுள்ளது. அதன்படி கோலி இதுவரை தான் பதிவிட்ட இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் சுமார் 140 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டியுள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த பட்டியலின் முதல் இடத்தில் அமெரிக்காவின் மாடல் அழகியான கெய்லி ஜென்னர் இருக்கிறார்.

Advertisement