7 வருடம்..! சச்சினுக்கு பிறகு சாதனை படைத்த கோலி..! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!

Kohli
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதிகள் டெஸ்ட் போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணி 31 ரன்கள் விதியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த முதல் போட்டியில் தோல்வியடைந்த போதும் இந்திய அணியின் கோலி 200 ரன்களை குவித்தார். மேலும், இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, டெஸ்ட் போட்டிகளில் சிறந்த பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.

kholi

- Advertisement -

இதற்கு முன்னாள் இந்த தரவரிசையில் 3 ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்தி வந்த ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித்தை பின்னுக்கு தள்ளி சர்வதேச டெஸ்ட் அரங்கில் சிறந்த பேட்ஸ்மேன் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார் கோலி. இந்த இடத்தை பிடிக்க கோலிக்கு 67 டெஸ்ட் போட்டிகள் தேவைப்பட்டது. இதுவரை இந்த பட்டியிலில் ஸ்மித் 929 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருந்து வந்தார். தற்போது கோலி 934 புள்ளிகளை பெற்று ஸ்மித்தை பின்னுக்கு தள்ளியுளளார்.

இதன் மூலம் 7 ஆண்டுகள் கழித்து இந்த தர வரிசையில் இடம்பிடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுளளர் கோலி . கடந்த 2009 ஆம் இந்திய அணியின் கவுதம் கம்பீர் சர்வதேச டெஸ்ட் போட்டிகளின் சிறந்த பேட்ஸ்மேன் பட்டியலில் முதல் இடத்தில் வந்தார். அதன் பின்னர் 2011 ஆம் ஆண்டு சச்சின் முதல் இடத்தை பிடித்தார். அதன் பின்னர் ஒரு இந்திய வீரரும் டெஸ்ட் போட்டிகளில் பேட்டிங் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்தது இல்லை.

கடந்த 5 ஆண்டுகளில் டெஸ்ட் போட்டிகளில் சிறந்த பேட்ஸ்மேன் பட்டியலில் இடப்பெற்ற வீரர்களின் விவரம்

- Advertisement -
sachin
sachin

* 2014 – ஏ பி டி வில்லியர்ஸ்(தென்னாபிரிக்கா )

* 2015 – ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா)

- Advertisement -

* 2016 – ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா)

* 2017 – ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா)

* 2018 – விராட் கோலி (இந்தியா)

Advertisement