கேன் வில்லியம்சன் சன் ரைசர்ஸ் அணியில் இணையும் தேதியை அறிவித்த – சன் ரைசர்ஸ் அணி

Williamson
- Advertisement -

இன்னும் இரண்டு நாட்களில் இந்தியாவின் மிகப்பெரும் கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடர் ஆரம்பமாக உள்ளது. இந்த 12வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இதற்கான சென்னை அணி தற்போது சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகிறது.

Warner

- Advertisement -

இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தங்களது சொந்த மைதானங்களில் தொடர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். சன் ரைசர்ஸ் அணி அணி ஹைதராபாத்தில் பயிற்சியினை மேற்கொண்டு வருகிறது. ஆனால் சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் இன்னும் அணியில் இணையவில்லை. தற்போது அவர் அணியில் இணையும் தேதி வெளியாகியுள்ளது.

நியூசிலாந்து அணி கடைசியாக பங்கேற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரின்போது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் காயமடைந்தார். இப்போது காயத்திலிருந்து மீண்ட வில்லியம்சன் நாளை மார்ட்டின் குப்தில் வுடன் இந்தியா வருகிறார். குப்தில் மற்றும் வில்லியம்சன் இருவரும் சன் ரைசர்ஸ் அணிக்காக இணைந்து விளையாடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அணி நிர்வாகம் ட்வீட் செய்து உறுதிப்படுத்தியுள்ளது. இதோ அந்த ட்வீட் :

வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் அணி கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபில் தொடரில் இறுதி போட்டியில் சென்னை அணியுடன் மோதி தோற்று தொடரில் இரண்டாம் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement