சர்ச்சையில் சிக்கி தவிக்கும் ஆஸ்திரேலியா அணிக்கு புது பயிற்சியாளர்..! – யார் தெரியுமா ?

langer1
- Advertisement -

கடந்த மார்ச் மாதம் தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா அணியின் வீரர்கள் சிலர் பந்தை சேதபடுத்திய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் இந்த விவகாரத்தில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணை கேப்டின் டேவிட் வார்ணர் மற்றும் இளம் வீரர் கேமரூன் ஆகியோர் கையும் களவுமாக சிக்கிக் கொண்டனர். இதனால் இவர்களை அணியில் இருந்து நீக்கியது ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம்.

Langer-Hayden

- Advertisement -

இந்நிலையில் பந்தை சேதப்படுத்திய வீரர்களின் அந்த செயலுக்கு தாமே பொறுப்பேற்று ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் டேரன் லீமென் தனது பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகினார். தற்போது அவருக்கு பதிலாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான ஜஸ்டின் லாங்கர் என்பவர் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜஸ்டின் லாங்கர் ஆஸ்திரேலிய அணியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆடியுள்ளள்ளார் . மேலும் முதல் 3 ஆண்டுகள் ஆஸ்திரேலிய அணிக்கு துணை பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.

வரும் 22ம் தேதி ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்கபோகிற ஜஸ்டின் லாங்கர் இன்னும் அடுத்த 3 ஆண்டுகளுக்கு ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளராக நீடிப்பார் என்று அறிவிக்கபட்டுள்ளது. மேலும் இவர் பொறுப்பேற்ற பிறகு தான் ஆஸ்திரேலிய அணி உலக கோப்பை, ஆஷஸ் தொடர்கள் என்று பல போட்டிகள் நாட்க்கவிருக்கிறது.

langer

ஏற்கனவே ஆஸ்திரேலியா அணியில் நடந்த கசப்பான சில சம்பவங்காளல் ஆஸ்திரேலியா ஆணை மிகவும் துவண்டு பொய் உள்ளனர். மேலும் அந்த அணியில் அனுபவமிக்க ஆட்டக்காரர்களும் மிகவும் குறைவாக தான் இருக்கின்றனர். ஆனால் அந்த அணியில் உள்ள இளம் வீரர்களை ஜஸ்டின் லாங்கர் சிறப்பாக பக்குவப்படுத்தி ஆஸ்திரேலியா அணியை மீண்டும் நல்ல நிலைக்கு கொண்டுவரும் பொறுப்பில் இருக்கிறார்.

Advertisement