இந்திய அணியில் இருந்து நான் பலமுறை நீக்கப்பட இருந்தபோது என்னை காப்பாற்றியவர் இவர்தான் – இஷாந்த் நெகிழ்வு

Ishath Sharma
- Advertisement -

இந்திய அணிக்காக கடந்த 2007 ஆம் ஆண்டு அறிமுகமானவர் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா இதுவரை அவர் 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 267 விக்கெட்டுகளையும், 80 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 115 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார் இந்திய ஒருநாள் அணியில் இவர் கடைசியாக ஆடிய போட்டி 2016 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரானது.

Ishanth

- Advertisement -

அதன் பிறகு இவருக்கு ஒருநாள் அணியில் இடம் கிடைக்கவில்லை ஆனாலும் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறார் இந்நிலையில் தற்போது இந்திய டெஸ்ட் அணியில் நீண்ட காலம் நிலைத்து நின்று ஆட இவருக்கு உதவியவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் இஷாந்த் சர்மா கூறியதாவது : இதுவரை நான் இந்திய அணிக்காக பல போட்டிகளில் கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாக ஆடி வருகிறேன். இத்தனை ஆண்டுகளில் என்னை பலமுறை அணியில் இருந்து நீக்க அணித் தேர்வுக்குழு நினைத்துள்ளது. ஆனால் என்னை அணியில் தொடர்ந்து விளையாட தேர்வுக்குழுவிடம் கேட்டுக்கொண்டது தோனி மட்டுமே என்று கூறியுள்ளார்.

Dhoni 1

மேலும், எனது பந்துவீச்சில் நான் சரிவினை கண்டபோது என்னை தேற்றி மீண்டும் சிறப்பாக பந்துவீச செய்தார். இந்த ஆண்டு உலகக் கோப்பை தொடர் தோனிக்கு முக்கியமான ஒன்றாகும். எனவே, தோனியின் பங்களிப்பு உலக கோப்பை தொடருக்கு நிச்சயம் தேவை என்பதே என் கருத்து என்று கூறினார் இஷாந்த் சர்மா.

Advertisement