இஷாந்த் மற்றும் ப்ரித்வி ஷா ஆகியோரை கேலி செய்யும் ரசிகர்கள் – காரணம் இதுதானா ?

Delhi
- Advertisement -

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் வரும் 23ம் தேதி முதல் துவங்குகிறது. இந்தத் தொடருக்கான அனைத்து அணி வீரர்களும் அவர்களது சொந்த நகரின் மைதானத்தில் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோன்று டெல்லி அணியும் டெல்லி மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது டெல்லி அணியில் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் உள்ளார்.

Ipl cup

- Advertisement -

இந்த அணியில் அதிரடி வீரர்களான ஷிகர் தவான், ரிஷப் பண்ட் மற்றும் ப்ரித்வி ஷா ஆகியோர் உள்ளனர். இந்நிலையில் இன்று பயிற்சியை மேற்கொண்டு பிறகு பத்திரிகையாளர்களுக்கு இஷாந்த் சர்மா மற்றும் ப்ரித்வி ஷா ஆகியோர் போட்டோவுக்கு போஸ் ஒன்றை கொடுத்தனர் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதன் முதற்காரணம் ப்ரித்வி ஷா வெறும் 19 வயதே உடையவர். உயரத்திலும் மிகவும் குறைவாக இருப்பார். ஆனால், இஷாந்த் அதற்கு நேர்மாறாக மிக உயரமாக இருப்பார். இதோ அந்த புகைப்படம் :

அவர்கள் இருவருக்குமிடையே உள்ள உயர வித்தியாசத்திற்காக இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் கேலி செய்யப்படும் வருகிறது. இருப்பினும் இந்த ஆண்டு பல அதிரடி வீரர்களை தன்வசம் வைத்துள்ள டெல்லி அணி இந்த ஆண்டு நிச்சயம் அனைத்து அணிக்கும் கடும் போட்டியினை தரும் என்பதில் சந்தேகமில்லை.

Advertisement