கிண்டல் அடித்தவர்களுக்கு சிங்கம்னு நிரூபித்து காட்டிய தோனி ..! – காரணம் இதுதான் ..?

shane
- Advertisement -

ஐபிஎல் வரலாற்றில் மூன்றாவது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது சென்னை அணி. வாட்சனின் அதிரடியான ஆட்டத்தால் வெற்றி கோப்பையை கைப்பற்றி சென்னை ரசிகர்களை ஆனந்த வெள்ளத்தில் மிதக்கவிட்டுள்ளது.இந்த போட்டியில் சீனியர் வீரர்கள் சிறப்பாக விளையாடி சென்னை அணியை வயதான அணி என்று கூறிவந்தவர்கள் முகத்தில் கறியை பூசியுள்ளது.
Watson2

ஐபிஎல் தொடரின் 11 வது சீசனின் இறுதி போட்டி நேற்று (மே 27) இனிதே நிறைவடைந்தது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் கோப்பையை வெற்றி பெற போவது யார் என்று களமிறங்கியது சென்னை மாற்று ஹைதராபாத் அணி. இந்த போட்டியின் டாஸ் போடும்போதே சென்னை அணி வென்று பீலடிங்கை தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கோஸ்வானி மற்றும் தவான் ஜோடி சிறப்பான தொடக்கத்தை கொடுக்கவில்லை. 5 ரன்களில் ரன் அவுட் ஆகி வெளியேறிய கோஸ்வானியை தொடர்ந்து 26 ரன்களில் ஜடேஜா வீசிய பந்தில் போல்ட் ஆனார் தவான்.

- Advertisement -

பின்னர் களமிறங்கிய அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன் பொறுப்பாக விளையாடி 47 எடுத்தார். பின்னர் அவரும் ஷர்மா வீசிய பந்தை தவறவிடத்தில் அது தோணியிடம் சென்று ஸ்டாம்பிங் செய்யப்பட்டது. பின்னர் களமிறங்கிய யூசப் பதான் அதிரடியாக விளையாடி 25 பந்துகளில் 45 ரன்களை குவித்தார். இறுதியில் அவருடன் களமிறங்கிய ப்ராத்வைட்டும் எடுத்த 21 ரன்களால் ஹைதராபாத் அணி 178 ரன்களை இலக்காக வைத்தது.
Watson3

பின்னர் களமிறங்கிய சென்னை அணியின் டுப்ளிஸி 10 ரங்களில் ஆட்டமிழக்க, வாட்சன் தனது அதிரடியை காட்டி வந்தார். இந்த போட்டியில் 51 ரன்களை எடுத்திருந்தால் ஐபிஎல் வரலாற்றில் 3000 ரன்களை எடுத்த முத்த வீரர் என்ற சாதனையை படித்திருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டார் ரெய்னா. ஆனால் 24 பந்துகளில் 32 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் வாட்சன் மட்டும் நிலைத்து விளையாடி 57 பந்துகளில் 117 ரன்களை எடுத்திருந்தார். இதன் மூலம் சென்னை அணி 18.3 ஓவர்களில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

Advertisement