ஐ.பி.எல் கோப்பையை அறிமுகப்படுத்தி 8 அணி கேப்டனும் எடுத்துக்கொண்ட குரூப் போட்டோ

Ipl cup
- Advertisement -

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் கடந்த 2008ஆம் ஆண்டு அறிமுகமானது. அதனை தொடர்ந்து இப்போது 12 ஆண்டுகளாக ரசிகர்களின் தொடர் ஆதரவால் இந்த ஆண்டு வரை சிறப்பாக நடைபெற்று வருகிறது. உலக கிரிக்கெட் பார்வையினை இந்தியாவின் பக்கம் திருப்பியதற்கு முக்கிய காரணமாக அமைந்தது இந்த ஐ.பி.எல் தொடர்.

Ipl opening

- Advertisement -

இந்த ஆண்டு 12ஆவது ஆண்டாக ஐ.பி.எல் போட்டிகள் நாளை துவங்க உள்ளது. நாளை துவங்க உள்ள முதல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்த ஆண்டு மொத்தம் 8 அணிகள் இந்த தொடரில் விளையாடுகின்றன. கடந்த 2018ஆம் ஆண்டு ஐ.பி.எல் கோப்பையை சென்னை அணி கைப்பற்றியது.

இந்நிலையில் இந்த ஆண்டு ஐ.பி.எல் கோப்பையை 8 அணி கேப்டன்களும் இன்று அறிமுகப்படுத்தினார். இதில் சன் ரைசர்ஸ் அணியின் வில்லியம்சன் இன்று இரவு இந்தியா வர உள்ளதால் அவருக்கு பதிலாக புவனேஷ்வர் குமார் கலந்து கொண்டார். இதோ அந்த புகைப்படம் :

நாளை முதல் ஐ.பி.எல் தொடர் துவங்க உள்ளதால் இந்த இரண்டு மாதமும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு முழுவதும் கொண்டாட்டம் தான். நாளை மாலை சரியாக 6 மணிக்கு சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் இடையேயான போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் துவங்குகிறது.

Advertisement