கருண் நாயர்..விஹாரி..ரிஷப் பண்ட்..! இந்திய ‘A’ அணி அதிரடி ஆட்டம்.! மண்ணை கவ்விய வெஸ்ட் இண்டீஸ் அணி.!

India
- Advertisement -

இந்திய ஏ அணி மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் விளையாடி வந்தது. கடந்த 4 ஆம் தேதி துவங்கிய முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. அதைத்தொடர்ந்த கடந்த ஜூலை 10 ஆம் தேதி நடைபெற்ற இரண்டாம் டெஸ்ட் போட்டியில் கருண் நாயர், விஹாரி, ரிஷப் பன்ட் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் வெற்றி பெற்றுள்ளது.

Rishabh-Pant

- Advertisement -

டவுன்டவுனில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய மேற்கிந்திய ஏ அணி 302 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 198 ரன்களுக்கு சுரண்டது. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியை, 210 ரன்களுக்குள் சுருட்டியது இந்திய அணி.

பின்னர் 321 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான சாம்ராத் மற்றும் ஈஸ்வர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதை தொடர்ந்து கை கோர்த்த கருண் நாயர்(55) மற்றும் விஹாரி(68) பொறுப்பாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். பின்னர் இவர்களை அடுத்து களமிறங்கிய ரிஷப் பண்ட் சிறப்பாக விளையாடி 71 பந்துகளில் 67 ரன்களை குவித்தார். இறுதியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

karun nair

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் 18 வயது இளம் வீரராக களமிறங்கிவர் ப்ரித்தீவ் ஷா. u 19 உலக கோப்பை போட்டிகளில் அபாரமாக ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர். தற்போது இங்கிலாந்தில் நடக்கும் வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இந்திய ஏ அணியின் தொடக்க ஆட்டக்காரராக விளையாடி வந்த பிருத்வி ஷா அபார சதமடித்து அசத்தனார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement