ரஷீத் கானுக்கு இந்திய குடியுரிமை..! ரசிகர்கள் வேண்டுகோள்..! சுஷ்மாசுவராஜ் அதிரடி பதில்..?

rashidkhan
- Advertisement -

நேற்று (மே 25) நடைபெற்ற ஐபிஎல் தொடரின் இறுதி போட்டிக்கான தகுதி சுற்று போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் அபராமபாக விளையாடி ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு முழு காரணமாக இருந்த ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கானிற்கு பாராட்டுக்கள் குவித்தவருவதுடன், அவருக்கு இந்திய குடியுரிமையை அளிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ட்விட்டரில் கூறி வருகின்றனர்.
Sushma-Swaraj
ஆப்கனிஸ்தான் வீரரான ரஷீத் கான் நடந்து வரும் ஐ.பி.எல் போட்டிகளில் ஹைதராபாத் அணியில் சிறப்பாக விளையாடி வருகிறார் .இதுவரை 16 போட்டிகளில் விளையாடி 21 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். மேலும் அணைத்து பந்து வீச்சாளர்களை விடஓவருக்கு 6.88 ரன்களை கொடுத்து குறைந்த பந்துவீச்சு சராசரியை பெற்றுள்ளார்.

மேலும் நேற்று நடந்த கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்து வீசியத்துடன் 10 பந்துகளில் 34 ரன்களை அடித்து அனைவரையும் உறைய வைத்தார். மேலும் பந்து வீச்சில் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.இதனால் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது. மேலும் ரசிகர்கள் சிலர் அவருக்கு இந்திய குடியுரிமையை வழங்க வேண்டும் என்று இந்திய ரசிகர்கள் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.
rashid-khan

- Advertisement -

இந்நிலையில் இதற்கு பதில் ட்வீட் செய்த வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவிக்கையில் “உங்களது அணைத்து டீவீட்டையும் நான் பார்த்தேன், குடியுரிமை என்பதெல்லாம் இந்திய உள்துறை அமைச்சகம் சார்ந்தது ” என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement