மறக்க முடியாத தினத்தில் ஓய்வை அறிவித்த இந்திய நட்சத்திர வீரர்..! – யார் தெரியுமா..?

mohammad
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி வீரர் முகமத் கைஃப் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். . தற்போது 37 வயதாகும் முகமத் கைஃப் 2002- 2006 ஆம் ஆண்டு வரை இந்திய அணியில் விளையாடி வந்தார். பின்னர் 2006 க்கு பிறகு இவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்த நிலையில் தற்போது முகமத் கைஃப் தற்போது கிரிக்கெட் போட்களில் இருந்து ஒய்வு பெற்றுள்ளார்.

இந்திய அணியில் விளையாடியுள்ள முகமத் கைஃப் பேட்டிங்கை விட இவரது சிறப்பான பீல்டிங் திறமைக்கு மிகவும் பெயர் போனவர். இதுவரை இந்திய அணிக்காக 13 டெஸ்ட் போட்டிகள், 120 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதுபோக 186 முதல் ரக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள முகமத் கைஃப் 10229 ரன்களையும் குவித்துள்ளார்.

சமீபத்தில் கிரிக்கெட்டின் அனைத்து விதமான போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ள முகமத் கைஃப் “நான் இன்று ஒய்வு பெறுகிறேன்.வரலாற்று சிறப்புமிக்க நெட்வெஸ்ட் தொடரில் விளையாடி வெற்றி பெற்று 16 ஆண்டுகள் கடந்து விட்டது. அந்த போட்டியில் நான் பங்கேற்றதை எண்ணி பெருமையடைகிறேன். இந்திய அணியின் தொப்பியை அணிய எனக்கு வாய்ப்பு கிடைத்தது எனது பாக்கியமாக எண்ணுகிறேன். ” என்று உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.
mohammed
மேலும், தனது ஒய்வு குறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கைஃப் “நான் கிரிக்கெட் விளையாட தொடங்கியதிலிருந்தே இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடுவது ஒரு கனவாக இருந்தது. இந்திய அணிக்காக எனது வாழ்வில் 190 நாட்கள் களத்தில் இறங்கியது மிகவும் பெருமையாக இருக்கிறது.இன்று கிரிக்கெட் போட்டிகளில் இருந்து நான் ஒய்வு பெறுவது குறித்து அறிவிக்க ஒரு உகந்த நாள். அனைவருக்கும் நன்றி ” என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement