இலங்கையை வீழ்த்தி இந்தியா இறுதி போட்டிக்கு தகுதி.

- Advertisement -

இலங்கையில் படைபெற்றுவரும் நிடாஸ்கோப்பை டி20 முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இந்தியா இலங்கைக்கு இடையேயான 4வது லீக் போட்டியில் 6விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அசத்தியது.கொழும்புவில் நடைபெற்ற நேற்றைய போட்டி மழையின் காரணமாக 20நிமிடங்கள் தாமதமாகவும் 20ஓவரில் 1ஓவர் குறைந்து 19 ஓவர் போட்டியாகவும் நடைபெற்றது.

sharma1

நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது.நேற்றைய போட்டியில் அணியில் சிறுமாற்றமாக ரிஷப் பண்ட்டிற்கு பதிலாக லோகேஷ் ராகுல் சேர்க்கப்பட்டார்.முதலில் விளையாடிய இலங்கை அணி 19 ஓவரில், 9 விக்கெட்டுக்கு 152 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

இலங்கை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய குணதிலகா மற்றும் குசல் மெண்டிஸ் தொடக்கத்தில் அதிரடியாக ஆட முதல் 7 பந்தில் 21 ரன்கள் எடுத்தது.பின்னர் ஷர்துல் தாகூர் பந்துவீச அழைக்கப்பட அவர் வீசிய முதல் பந்திலேயே குணதிலகா 17ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரெய்னாவிடம் கேட்ச் தந்து பெவிலியன் திரும்பினார்.

shakul

அடுத்து களமிறங்கிய குசல் பெரேரா தமிழகவீரரான விஜய் சுந்தர் வீசிய பந்தில் ரிவர்ஸ் சுவீப் செய்ய முயற்சித்து 3ரன்களில் போல்டானார்.பின்னர் வந்த வீரர்களும் ஷர்துல் வேகத்தில் வந்தவுடனேயே நடையை கட்ட, மென்டிஸ் மட்டும் ஓரளவிற்கு தாக்குபிடித்து அரைசதம் அடிக்க இலங்கை அணி 19ஓவர்களின் முடிவில் 9விக்கெட் இழப்பிற்கு 152ரன்களை எடுத்தது.

- Advertisement -

153 ரன்களை எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 17.3 ஓவர்களிலேயே 4விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை இலகுவாக எட்டியது.இந்திய அணியை பொறுத்தவரையிலும் ரோகித்சர்மா 11 ரன்களும்,தவான் 8 ரன்களும்,சுரேஷ் ரெய்னா 27 ரன்களும்,லோகேஷ் ராகுல் 18 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

raina

அடுத்ததாக ஜோடி சேர்ந்த மணீஷ் பாண்டேவும், தினேஷ் கார்த்தியும் நிதானமாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றனர்.ஏற்கனவே இந்த தொடரில் முதல் சுற்றில் இந்தியா,இலங்கை,வங்கதேச அணிகள் தலா ஒரு வெற்றியை பெற்றிருந்த நிலையில் இரண்டாம் சுற்றில் இலங்கையை வீழ்த்தியதன் மூலம் இந்திய அணி இரண்டு வெற்றிகளை பெற்று முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டியில் முன்னிலை பெற்றுள்ளது.

Advertisement