வெற்றிப்பெற்றுக்கொண்டே இருந்தால்..! தோல்வி குறித்து பேட்டியளித்த தோணி – என்ன சொன்னார் தெரியுமா ?

sharma
- Advertisement -

நேற்று நடந்த சென்னை மற்றும் மும்பைக்கு போட்டியில் முதலில் பேட் செய்த சென்னை அணி 20 ஓவர் முடிவில் 169 ரன்களை எடுத்தது. மேலும் சென்னை அணியில் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடிய அம்பதி ராயுடு 46 ரங்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய சின்ன தல ரெய்னா அதிரடியாக விளையாடி 47 பந்துகளில் 75ரன்களை விளாசினார். ஒரு கட்டத்தில் ரைனாவிற்கு பக்கபலமாக இருந்த டோனி சிறப்பாக விளைய்டிகொண்டிருந்தார்.

ஒரு கட்டத்தில் அணியின் எண்ணிக்கை 200 தாண்டும் என்று எதிர்பார்க்க பட்டது ஆனால் தோனி 26 ரன்களில் அட்டமிழகவே அணியின் ரன் குவிப்பு வேகம் குறைந்தது. மேலும் தோனிக்கு பிறகு களமிறங்கிய பிராவோ ரன் ஏதும் எடுக்காமல் அட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றினார்.இதனால் அணியின் எணிக்கை 169 லே நின்றது.

- Advertisement -

இதற்கு பிறகு களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான யாதவ் மற்றும் லெவிஸ் கூட்டணி பொறுப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு அடித்தலமிட்டனர். யாதவ் 44 ரன்களும், லெவிஸ் 47 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். பின்னர் அடுத்து வந்த கேப்டன் ரோஹித் சர்மா அரை சத்தம் அடித்து மும்பை அணியை வெற்றிபெற செய்தார்.

இந்த போட்டிக்கு பிறகு பேட்டியளித்த தோனி அணியின் தோல்வி குறித்து பேசியதாவது ” இதுபோன்ற தோல்விகளில் கற்றுக் கொள்ள முடியும் . தொடர்ந்து வெற்றி பெற்றுக் கொண்டிருந்தாள் கடினமாக உழைக்க வேண்டிய நேரம் தெரியாமல் போய் விடும். மேலும் இந்த போட்டியில் என்ன தவறு நடந்து இருக்கிறது என்று அறிந்து கொள்வது முக்கியம்.தனிப்பட்ட வீரர்களில் திறமைகளை நம்பி தான் இருக்கிறோம். மேலும் இந்த போட்டியில் 10 முதல் 15 வைத்து ஓவர்களில் மும்பை அணி சிறப்பாக பந்து வீசினார்கள். அவர்களின் பந்து வீச்சாளர்கள் தேர்வும் நன்றாக இருந்தது “என்று குறிப்பிட்டிருந்தார்.

Advertisement