முதல் சிக்ஸர் அடித்ததை பற்றிய ரகசியத்தை வெளிப்படுத்தினார் பண்ட்.! இதற்காகத்தான் சிக்ஸர் அடித்தேன்.!

pant
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய ரிஷப் பண்ட் தான் சந்தித்த இரண்டாவது பந்தினை சிக்சருக்கு விரட்டினர். இதன்மூலம், டெஸ்ட் கிரிக்கெட் ரன்னை சிக்ஸர் அடித்து துவங்கிய முதல் இந்திய வீரர் எனவும் சாதனை படைத்தார். கீப்பிங்கிலும் அவர் சிறப்பாக செயல்பட்டு பல கேட்ச்களை பிடித்தார்.

pant

- Advertisement -

இந்நிலையில், அவர் அடித்த அந்த சிக்ஸர் பற்றிய ரகசியத்தை அவர் பகிர்ந்துள்ளார். அதாவது, நான் களமிறங்கியதும் பதட்டம் இல்லாமல் சாதாரணமாகவே வந்தேன். இரண்டாவது பந்து என்னை நோக்கி சற்று மேல் எழும்பி வந்தது, இவ்வாறு எழும்பி வரும் பந்துகளை எளிதாக தூக்கி அடிக்கலாம். எனவே நான் அதை சரியாக கணித்து நிதானமாகவே அதை சிக்சருக்கு விரட்டினேன்.

மேலும், அந்த பந்து நான் சந்தித்த முதல் பந்தாக இருந்திருந்தால் கூட கண்டிப்பாக அந்த பந்தினை சிக்ஸர் அடித்துருப்பேன். இங்கிலாந்து ஆடுகளங்களில் என்னால் ரன் குவிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையோடு 3வது டெஸ்டில் களமிறங்கினேன். மேலும், சிறப்பாக செயல்பட்டதாகவே கருதுகிறேன். இனிவரும் ஆட்டங்களிலும் நான் சிறப்பாக விளையாட முயற்சிப்பேன்.

pant 1

இங்கிலாந்து ஆடுகளங்களில் விக்கெட் கீப்பிங் செய்வது கூட கடினமாக உள்ளதை உணர்ந்தேன். பந்து எப்போது மைதான தன்மைக்கு மாறுகிறது என்பதை கணிக்க முடியவில்லை. இந்த போட்டியில் பும்ராஹ், இஷாந்த் சர்மா மற்றும் ஹார்டிக் பாண்டியா போன்ற வீரர்கள் சிறப்பாக பந்துவீசினார்கள். என்று கூறினார். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான 4வாத்து டெஸ்ட் போட்டி வரும் ஆகஸ்ட் 30ம் தேதி துவங்குகிறது.

Advertisement