தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் பெங்களூரு வீரர் ஹெட்மயர் – வீடியோ

- Advertisement -

இந்த ஆண்டு 12ஆவது ஐ.பி.எல் போட்டித்தொடர் நாளை மாலை முதல் துவங்க உள்ளது. முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்க உள்ளது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாகி கொண்டே வருகிறது.

VK and MS

நாளை மாலை துவங்க உள்ள இந்த போட்டிக்காக பெங்களூரு அணி வீரர்கள் நேற்று பெங்களுருவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். சென்னை வந்த பெங்களூரு அணி வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை வீரர்களுடன் இணைந்து பயிற்சியினை மேற்கொண்டனர். இந்த பயிற்சியில் இரு அணி வீரர்களும் நீண்ட நேரம் கலந்து கொண்டனர்.

- Advertisement -

இன்று காலை துவங்கிய பயிற்சியில் பெங்களூரு அணியின் இளம் அதிரடி வீரரான ஹெட்மயர் கலந்து கொண்டார். பயிற்சியில் அவர் பந்தை தடுக்காமல் தூக்கி தூக்கி அடித்துக்கொண்டிருந்தார். அதிலிருந்து இவர் இந்த தொடரிலும் தனது அதிரடியை தொடரப்போகிறார் என்று தெரிகிறது. இதோ ஹெட்மயர் பயிற்சி செய்யும் வீடியோ :

வெஸ்ட் இண்டீஸ் வீரரான ஹெட்மயருக்கு 22 வயதே ஆகிறது. இவர் இந்தியாவிற்கு எதிராக நடந்த ஒருநாள் போட்டியில் அதிரடியாக மிரட்டல் சதத்தை அடித்தவர். மேலும், 25 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஹெட்மயர் 4 சதங்களை விளாசியுள்ளார். மேலும், ஒருநாள் கிரிக்கெட்டில் 110 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement