என்னை யாருடனும் ஒப்பிட வேண்டாம்.! நான் நானாக இருக்கிறேன் .! ஹார்டிக் பாண்டியா வேண்டுகோள்

- Advertisement -

இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். இதனால் இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்க்ஸை 161 ரன் எடுத்து ஆட்டமிழந்தது. தற்போது 2nd இன்னிங்க்ஸை தொடர்ந்து ஆடி வரும் இந்திய அணி 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 124 ரன்களை எடுத்துள்ளது. 294ரன்களுடன் முன்னிலையில் இருக்கும் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

CRICKET-SRI-IND

- Advertisement -

இதனை அடுத்து பேட்டி அளித்த பாண்டியா: “என்னை கபில் தேவ் உடன் ஒப்பிட வேண்டாம் ” என்று கூறியுள்ளார் . “நான் பாண்டியவாகவே இருக்க விரும்புகிறேன் ” என்றும் அவர் தெரிவித்தார். ஏனென்றால், நன்றாக விளையாடும் பொது என்னை கபில் தேவ் போன்ற ஆடுகிறார் என்கிறீர்கள். ஒருவேளை ஆட்டத்தில் தொய்வு ஏற்பட்டால் இவரை கபில் தேவ் உடன் ஒப்பிடுவது என்று கேட்கிறீர்கள். எனவே, நான் ஒருபோதும் கபில் தேவ் உடன் என்னை ஒப்பிட்டு பார்த்ததில்லை.

இதுவரை இந்திய அணிக்காக 10 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 40 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். இந்த போட்டியில் சரியான நேரத்தில் இந்த 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதால், இந்த spell தான் எனது சிறந்த பந்துவீச்சாக கருதுகிறேன் என்றார். ஹார்டிக் பாண்டியா தனது 3வது போட்டியிலே டெஸ்டில் சதம் விளாசியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

pandya 2

நேற்று இங்கிலாந்து அணியை நிலைகுலைய வைத்த மாதிரி, இரண்டாவது இன்னிங்சிலும் சிறப்பாக பந்து வீசினால் இந்திய அணி எளிதாக இந்த போட்டியை வென்று விடும். உள்ளோர் போட்டிகளில் நிறைய போட்டிகள் ஆடாமல் IPL போட்டிகள் மூலம் இந்திய அணிக்கு தேர்வானவர் தான் இந்த ஹர்டிக் பாண்டியா.

Advertisement