இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமாகும் உலகின் நம்பர் 1 வீரர்.! வாய்ப்பு கிடைக்குமா.?

- Advertisement -

ங்கிலாந்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் டெஸ்ட் தொடரில் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் ஹனும விஹாரி. 1999-ம் ஆண்டுக்குப் பிறகு ஆந்திராவிலிருந்து இந்திய டெஸ்ட் அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். 24 வயதான இவர், வலதுகை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்.

vihari

- Advertisement -

தற்போது விளையாடிக் கொண்டிருக்கும் வீரர்களில், முதல் தரப் போட்டிகளில் அதிக சராசரி வைத்திருக்கும் உலகின் நம்பர் 1 வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ளார் விஹாரி. 59.45 என்ற சராசரியைப் பெற்றிருக்கிறார். ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 57.27 என்ற சராசரியோடு இவருக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார்.

நடந்து முடிந்த ரஞ்சி டிராபி தொடரில், ஹைதராபாத் அணிக்காக விளையாடிய விகாரி 6 போட்டிகளில் 94.00 என்ற சராசரியோடு 752 ரன்களைக் குவித்திருந்தார். இந்த ரஞ்சி தொடரில், ஒடிசா அணிக்கு எதிராக தன் முதல் முச்சதத்தை (302*) நிறைவு செய்தார் விஹாரி. சமீபத்தில் ‘இந்தியா ஏ’ அணிக்காக மூன்று முதல் தர ஒருநாள் போட்டிகளில் விளையாடிய இவர் 253 ரன்களைக் குவித்திருந்தார். மேற்கிந்திய தீவுகள் ஏ அணிக்கு எதிராக இவர் குவித்த 147 ரன்கள் இந்திய அணித் தேர்வாளர்களின் கவனத்தை இவர் பக்கம் திருப்பியது.

vihari 2

கடைசி 5 முதல் தர ஒருநாள் போட்டிகளில் 2 அரைசதமும், ஒரு சதமும் அடித்திருக்கிறார் விகாரி. இவர் பகுதிநேர ஆஃப் ஸ்பின்னரும்கூட. 2012-ம் ஆண்டு சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய இவர், ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக முதல் ஓவரை வீசினார். அந்த ஓவரிலேயே கிறிஸ் கெயிலை பெவிலியனுக்கும் அனுப்பினார். அதே போட்டியில் 46 ரன்கள் குவித்ததும் குறிப்பிடத்தக்கது.

vihari

முதல் தர கிரிக்கெட்டிலேயே பல சாதனைகளைச் செய்துள்ள ஹனும விஹாரிக்கு, இங்கிலாந்துக்கு எதிராக மீதமுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா 4-வது டெஸ்ட்டை வென்றால் விஹாரிக்கு 5-வது டெஸ்ட்டில் வாய்ப்பு கிடைக்கலாம் என்ற கணிப்புகளும் வெளியாகியுள்ளன. வாழ்த்துகள் விஹாரி!

Advertisement