4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி எவ்வாறு விளையாடும்.? அதிரடி வீரர் சேவாக் கணிப்பு.!

sehwag
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதில், முதல் இரு போட்டிகளில் இங்கிலாந்து அணியும் அடுத்த போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றுள்ளன. எனவே,தொடர் இப்போது 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 4வது போட்டி வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி துவங்க உள்ளது.

third 1

- Advertisement -

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் அளித்த பேட்டியில்: இந்திய அணி கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடியது. அதேபோன்று இந்த போட்டியிலும் விளையாடும் என கருதுகிறேன். மேலும், இந்த போட்டியில் அவர்கள் பசித்த புலியை போல் ஆக்ரோஷமாக விளையாடுவார்கள் என்று நம்புகிறேன்.

இந்த போட்டியில் வெற்றி பெற இந்திய அணி கடுமையாக உழைக்கும். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக வீசி வருகின்றனர். கடந்த போட்டியை போலவே அவர்கள் எதிரணியின் 20 விக்கெட்டுகளையும் கைப்பற்றுவார்கள். பிளாட் பிட்ச்களில் அவர்கள் விக்கெட் வீழ்த்துவது சாத்தியம் தான். எனவே,பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி அவர்களது பெருமையை தக்கவைத்து கொள்வார்கள். என்று சேவாக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

pant hardik

4வது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முன்னைப்பில் உள்ளது. இங்கிலாந்து அணியோ வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற மும்முரமாக உள்ளது. எனவே ரசிகர்களுக்கு இந்த போட்டி விருந்து என்றே கூறலாம்.

Advertisement