நான் அவருடைய சுண்டு விரலுக்கு கூட ஈடாகமாட்டேன்.! அதிரடி வீரரை புகழ்ந்து தள்ளிய மெக்ராத்

Glenn-McGrath
- Advertisement -

தென்னாபிரிக்க வீரர் ஏபி டிவில்லியர்ஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தான் ஒய்வு பெறுவதாக கடந்த மே 23 ஆம் தேதி அறிவித்திருந்தார். இதனால் அவரது ரசிகர்களும் மற்றும் பல்வேறு கிரிக்கெட் வீரர்களும் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தனர். இந்நிலையில் ஏபி டிவில்லியர்ஸின் சுண்டுவிரல் திறமைக்கு கூட தனது முழு உடலின் திறமையும் ஈடாகாது என்று ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளார் மெக்ராத் தெரிவித்துள்ளார்.

south-africa-ab-de-villiers

கிரிக்கெட் உலகில் மிஸ்டர்.360 என்று அழைக்கப்படும் ஏபி டிவில்லியர்ஸ், கடந்த 14 ஆண்டுகளாக தென்னாபிரிக்க அணியில் விளையாடிவந்தார். இதுவரை 228 ஒருநாள் போட்டிகள், 114 டெஸ்ட் போட்டிகள், 78 சர்வதேச டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். அதிரடி ஆட்டக்காரராக இருந்த இவர், அந்த அணியின் சிறந்த விக்கெட் கீப்பராகவும் இருந்து வந்தார்.

- Advertisement -

தற்போது 34 வயதாகும் ஏபி டிவில்லியர்ஸ் சிறப்பாக பேட்டிங் செய்வதுடன், இந்த வயதிலும் பீல்டிங்கிலும் அசத்தி வந்தார்.மேலும் இந்த ஆண்டு நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியில் விளையாடி 12 போட்டிகளில் 480 ரன்களையும் குவித்திருந்தார்.

Devillers

ஏபி டிவில்லியர்சிற்கு பல்வேறு நாட்டு ரசிகர்களும் இருக்கின்றனர். இந்நிலையில் ஏபி டிவில்லியர்ஸின் புகழை பற்றி சமீபத்தில் பேட்டியில் பேசிய ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளார் மெக்ராத் கூறுகையில் “ஏபி டிவில்லியர்ஸ் இயற்கையாகவே திறமை மிக்க வீரர், என்னுடைய உடல் முழுவதும் உள்ள திறமையை விட அவர் சுண்டு விரலில் அதிக திறமையை வைத்திருக்கிறார். அவர் சிறந்த வீரர் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை ” என்று ஏபி டிவில்லியர்ஸை பற்றி பெருமையாக கூறியுள்ளார்.

Advertisement