எம்.பி. பதவிக்கு போட்டியிட போகும் கம்பீர் – எந்த தொகுதியில் நிற்கப்போகிறார் தெரியுமா ?

Gautham-Gambhir
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரரான கவுதம் கம்பீர் டெல்லியை சேந்தவர். இவர் இந்திய அணிக்காக 147 ஒருநாள் போட்டிகள், 58 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 37 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஐ.சி.சி நடத்திய 2007ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரிலும், 2011ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை தொடரிலும் இந்திய அணி வெற்றிபெற்றபோது அணியின் வெற்றிக்கு முக்கிய வீரராக திகழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

gambhir 1

- Advertisement -

இந்நிலையில் மார்ச் 22ஆம் தேதி இன்று கவுதம் கம்பிர் அருண் ஜெட்லி மற்றும் ரவி ஷங்கர் பிரசாத் ஆகியோரின் தலைமையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். நாடாளுமன்ற தேர்தல் துவங்க உள்ள சில நாட்களுக்கு முன்னர் கம்பீர் கட்சியில் இணைந்திருப்பது அனைவர்க்கும் ஆச்சரியம் அளித்தது. இதுகுறித்து பேசிய கம்பீர் கூறியதாவது :

நான் இன்று முறைப்படி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளேன். இதற்கு காரணம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையே. அவரின் இந்த தொலைநோக்கு பார்வை இந்தியாவை உலக அளவில் தலைநிமிர வைக்கும் என்பதால் நான் இந்த கட்சியில் என்னை இணைத்துக்கொண்டு மக்களின் நலனுக்காக பணி செய்ய போகிறேன் என்று கம்பீர் பேசினார்.

gambhir

டெல்லியில் பிறந்தவரான கம்பீர் அந்த மாநிலத்தில் மிக பிரபலமானவர். எனவே, டெல்லியில் உள்ள 7 தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியில் கம்பீரை பி.ஜே.பி கட்சி எம்.பி பதவிக்கு வேட்பாளராக நிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னர் இந்திய அணி வீரரான ஜடேஜாவின் மனைவி சென்ற வாரம் பி.ஜே.பி கட்சியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement