தோனியின் அசாத்திய திறமையை கண்டுபித்தது எப்படி.! 13 வருட ரகசியம் உடைத்த கங்குலி.!

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த தோனி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார் என்பது நமக்கு தெரியும். இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் 28 ஆண்டு கால உலக கோப்பை கனவை நினைவாக்கியவர் தோனி. இந்திய கிரிக்கெட் அணியின் ஒப்பற்ற பொக்கிஷமாக இருக்கும் தோனியின் பேட்டிங் திறமையை வெளிக்கொண்டு வந்ததே முன்னாள் கேப்டனான கங்குலி தான்.

dhoni

- Advertisement -

கடந்த 2004 ஆம் ஆண்டு தனது முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் களமிறங்கிய தோனி , தனது முதல் வங்கதேச அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். அதன் பின்னர் 2005 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது கங்குலி தலைமையிலான இந்திய அணியில் பங்குபெற்றார் தோனி.

முதல் போட்டியில் 7 வது இடத்தில் களமிறங்கிய தோனி 7 பந்துகளில் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அந்த போட்டிக்கு பின்னர் தோனி மீதான பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. ஆனால், அப்போதய இந்திய அணியின் கேப்டனாக இருந்த கங்குலி, தோனி மீது நம்பிக்கை வைத்து இரண்டாவது போட்டியில் 3 வது இடத்தில் களமிறங்க வைத்துள்ளார். அந்த போட்டியில் இந்திய அணியில் அதிகபட்ச ரன்னை குவித்த தோனி. 148 ரன்களை குவித்து அந்த போட்டியில் ஆட்டநாயகன் விருதையும் பெற்றார். அந்த போட்டிக்கு பின்னர் பேட்டிங் ஆர்டரில் தோனிக்கு ப்ரோமோஷன் கொடுக்கப்பட்டு 3 வது வரிசையில் தொடர்ந்து ஆடினார்.

சமீபத்தில் பிரேக்ஃபாஸ்ட் வித் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கங்குலி, தோனியின் இந்த சிறப்பான ஆட்டம் குறித்து நினைவு கூர்ந்தார். அப்போது அவர் தெரிவிக்கையில்”’ தோனியின் திறமை எனக்கு தெரிந்தது. அவரது திறமையை வெளிக்கொண்டுவர நினைத்தேன். அதனால் விசாகப்பட்டினத்தில் நடந்த போட்டியில் மூன்றாம் வரிசையில் களமிறங்க சொன்னேன்.

sourav-ganguly-ms-dhoni

மூன்றாம் வரிசையில் களமிறங்கிய தோனி, 148 ரன்களை குவித்து தனது திறமையை நிரூப்பித்தார் . இளம் வீரர்களை முன் வரிசையில் களமிறக்குவதன் மூலம் தான் அவர்களது திறமையை கண்டறிய முடியும் ”என்று தெரிவித்துளளார்.

Advertisement