விராத் கோலி இதற்காக பெங்களூரு அணிக்கு கடமைப்பட்டு ஆட வேண்டும் – கம்பீர் பேட்டி

Gambhir
- Advertisement -

இந்திய அணியின் தற்போது மூன்று வடிவ கிரிக்கெட்டுக்கும் கேப்டனாக செயல்படுபவர் விராத் கோலி. இவர் கடந்த 8 ஆண்டுகளாக பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இந்த ஆண்டும் இவரே பெங்களூரு அணியின் கேப்டனாக செயல்பட இருக்கிறார்.

VK and MS

- Advertisement -

இந்நிலையில் இவரது கேப்டன்சி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கம்பீர் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் கம்பீர் கூறியதாவது : விராட் கோலி தலைமையில் பெங்களூரு அணி பலமுறை ஐபிஎல் தொடர்களில் ஆடி உள்ளது. ஆனால் ஒரு முறை கூட அவர்களால் கோப்பையை கைப்பற்ற முடியவில்லை. தோனி மற்றும் ரோஹித் ஆகியோர் மூன்று முறை கோப்பையை கைப்பற்றி உள்ளனர். இதனால் நான் கோலியின் தரத்தை குறைத்து மதிப்பிடவில்லை.

கோலி சிறந்த கேப்டன் இருந்தும் அவரால் கோப்பையை வெல்ல முடியாதது துரதிர்ஷ்டவசமாக உள்ளது. இருந்தாலும் எத்தனை தொடர் இழந்திருந்தாலும் தொடர்ந்து கோலியை கேப்டனாக வைத்திருக்கும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு என்றும் கோலி கடமைப்பட்டு விளையாட வேண்டும். எத்தகைய சூழ்நிலையிலும் பெங்களூரு அணி கோலியினை கேப்டன் பதவியிலிருந்து நீக்கவும் அல்லது அணியிலிருந்து நீக்கவும் நினைத்ததில்லை.

Kohli

அதனால் அந்த பொறுப்புடன் மற்றும் அந்த கடமை உடனும் கோலி பெங்களூர் அணிக்காக தனது முழு ஒத்துழைப்பையும் தந்து ஆட வேண்டும் நின்று கம்பீர் தெரிவித்தார்.

Advertisement