ஐபிஎல் உரிமையாளர்களை வெளுத்து வாங்கிய கம்பிர்..! தோனிகிட்ட உங்க பருப்பு வேகாது..! – காரணம் இதுதான்..?

gambir
- Advertisement -

ஐ பி எல் வரலாற்றில் இது வரை ஒரு முறை கூட கோப்பையை வென்றிடாத டெல்லி அணி, இந்த ஆண்டு கௌதம் கம்பீர் தலைமையில் களமிறங்கியது. ஆரம்பம் முதலே மோசமான தோல்விய்களை கண்டது. இதனால் டெல்லி அணி தோல்வியடைந்ததற்கு முழு காரணம் அந்த அணியின் உரிமையாளர்கள் தான் என்று கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
Gautam Gambhir

சமீபத்தில் ஆங்கில பத்திரிகை ஒன்றில் கட்டுரை எழுதி வெளியிட்ட கம்பீர் டெல்லி அணியின் உரிமையாளர்களை வறுத்தெடுத்துள்ளார். இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணி மோசமாக விளையாடி வந்தது தொடர் தோல்விகளால் அந்த அணியின் கேப்டன் கம்பீர் தாமாக முன்வந்து கேப்டன் பதிவியிலிருந்து விலகினார். மேலும் தனது மீதமுள்ள சம்பள தொகையையும் வேண்டாம் என்று தூக்கி எறிந்தார்.

- Advertisement -

டெல்லியின் தோல்வி குறித்து பத்திரிகை ஒன்றில் கட்டுரை எழுதியுள்ளார் கம்பீர் “ஐபிஎல் என்பது அதிக பணம் புழங்கும் தொழிலாக உள்ளது. ஒவ்வொரு அணிக்கும் அந்த அணியின் உரிமையாளர்கள் பல கோடி ரூபாய் செலவு செய்கின்றனர். தனிப்பட்ட வகையில் ஏதோ ஒரு தொழிலில் வெற்றி அடைந்தவர்களாக இருக்கும் அவர்கள், இந்த ஐபிஎல் தொடரையும் தொழிலாக பார்த்து இதில் வெற்றி பெற வேண்டும் என்று நினைகின்றனர்.
dhoni

வீரர்களுக்கு இது ஒரு முக்கியமான விளையாட்டு அதனால் அவர்கள் நல்ல அணியிடம் தோற்றால் அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் அணியின் இரக்கமற்ற உரிமையாளர்களால் அந்த தோல்வியை ஏற்க முடியாது. அணைத்து அணிகளிலும் முதிலீட்டாளர்களில் தலையீடு இருக்கும் அதனால் வீரர்களுக்கு சுதத்ந்திரமும் கிடைப்பதில்லை. சென்னை அணியில் மட்டும் தான் உரிமையாளர்களின் தலையீடு அந்த அணிக்கு எல்லாமே தோனி தான் அதனால் தான் அந்த அணி சிறப்பாக விளையாடி கோப்பையை கைப்பற்ற முடிந்தது. என்று எளிதியுள்ளார். “

Advertisement