ஒரு வேலை சாப்பாட்டுக்கு 7 லட்சம் பில் கட்டிய பிரபல கிரிக்கெட் வீரர்..! – யார் தெரியுமா..?

india
- Advertisement -

பிரபலங்கள் 5 நட்சத்திர ஹோட்டல்களில் உணவு உண்பது வழக்கமான ஒருவிடயம் தான். அப்படி அவர்கள் உணவு உண்ணும் போது 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை பில் வந்தால் கூட அது ஒன்றும் ஆச்சரியமான விடயமில்லை. ஆனால், சமீபத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா உணவகத்தில் 7 லட்சம் கொடுத்து உணவு உண்டதாக ட்விட்டரில் பதிவிட்ட விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது,
chopra
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ஆகாஷ் சோப்ரா இந்திய கிரிக்கெட் அணிக்காக சொற்பமான போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். மேலும், ஐபிஎல் தொடரின் முதல் இரண்டு சீசனில் கொல்கத்தா அணியிலும், 4வது சீசனில் ராஜஸ்தான் அணியிலும் விளையாடியுள்ளார். தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார்.

சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ஓட்டலில் உணவு உட்கொண்டு 7 லட்ச ரூபாய் பில் செலுத்திய ரசீது ஒன்றை பதிவிட்டிருந்தார். என்னது ஒரு ஆள் சாப்பிட 7 லட்சமா ? என்று அணைவரும் வியந்து விட்டனர். ஒரு அவர் பதிவிட்ட அந்த ரசீதில் சாதாரண ஹோட்டலில் பரிமாறபடும் சாதாரண உணவு பட்டியில் தான் இருந்தது. அப்படி இருந்தும் 7 லட்சம் ரூபாய் எப்படி ஆனது என்று ட்விட்டர் வாசிகள் குழம்பி இருந்தனர்.
chopra
இந்நிலையில் அவர் பதிவிட்ட ரசீதை நன்றாக ஆராய்ந்த போது தான் விடயமே தெரியவந்தது. சமீபத்தில் ஆகாஷ் சோப்ரா இந்தோனேஷியாவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கே உள்ள ஒரு ஹோட்டலில் தான் உணவு உண்டுள்ளார். அங்கு இந்திய ரூயாய் 1 ரூபாயின் மதிப்பு 210 ரூபாய் 20 பைசாவாகும். எனவே அவர் செலுத்திய 7 லட்சம் என்பது இந்திய ரூபாய் மதிப்பின் படி 3,334 தான் மட்டும் தான்.

- Advertisement -
Advertisement