ஓடுகளத்தில் தன்னைத்தானே விக்கெட் வாங்கி கொண்ட முதல் பெண் கிரிக்கெட்டர்.!

- Advertisement -

மகளீர் ஆசிய உலக கோப்பை தொடரில் தொடர்ந்து 6 முறை ஆசிய கோப்பை வென்ற இந்திய அணியை, இந்தாண்டு நடைபெற்ற ஆசிய கோப்பையின் இறுதி போட்டியில் வீழ்த்தி வங்கதேச அணி முதன் முறையாக சாம்பியன் பட்டதை வென்றது. இந்த போட்டியில் மகளீர் கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறையாக வித்யாசமான முறையில் அவுட் ஆகியுள்ளார் இந்திய வீராங்கனை அனுஜா பட்டில்.

anujapatil

- Advertisement -

நேற்று (ஜூன் 10 ) கோலாலம்பூரில் உள்ள மைதானத்தில் ஆசிய கோப்பையின் தொடரின் இறுதி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியனானா இந்திய அணி வங்கதேச அணியுடன் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் அணைத்து விக்கட்டுகளையும் இழந்து 112 ரன்களை மட்டுமே எடுத்து. இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஹர்மான்ப்ரீத் கவுர் மட்டும் நிதானமாக விளையாடி 42 பந்துகளில் 56 ரன்களை குவித்தார். பின்னர் களமிறங்கிய வங்கதேச அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றியை பெற்று பட்டத்தை கை பற்றியது.

runout

இந்த போட்டியின் முதல் பாதியில் இந்திய அணியில் 5 வது பேட்டிங் வரிசையில் களமிறங்கிய அனுஜா பட்டில், 9 வது ஒவேரின் போது பௌலிங் முனையில் நின்று கொண்டிருந்தார். அப்போது ஒரு சிங்கள் ரன்னை எடுக்க முயன்று மீண்டும் பௌலிங் முனைக்கு திரும்பினார்.

- Advertisement -

அப்போது அவரை ரன் அவுட் செய்ய வங்கதேச கீப்பர் ஷமீமா சுல்தானா, பௌலிங் முன்னையை நோக்கி பந்தை எரிய முனைந்த போது அனுஜா பட்டில் ஓடுகளத்தில் ஓடிக்கொண்டிருந்தார். இதனால் அவர் ரன் அவுட் செய்ய இடையூறு செய்ததாக வங்கதேச அணி மூன்றாவது நடுவருடன் முறையிட்டது. பின்னர், மூன்றாவது நடுவர், ஆட்டத்தின் போது ஓடுகளத்தில் ஓடி இடையூறு செய்ததால் அனுஜா பட்டில் அவுட் என்று அறிவித்தித்து.

anuja

 

இதன் மூலம் மகளீர் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக ஓடுகளத்தில் இடையூறு செய்து ஆட்டமிழந்த முதல் பெண் வீராங்கனை என்ற பெயரை பெற்றுள்ளார் அனுஜா பட்டில். இதுபோன்று ஆட்டமிழந்தது சர்வேதேச கிரிக்கெட் வரலாற்றில் இது இரண்டாவது முறையாகும். இதே போன்று இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய், தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் இதே போன்று ஆட்டமிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement