இப்படி ஒரு சோதனையா இந்திய அணிக்கு.! ஏன் இப்படி நடக்குது.! துவக்க ஜோடி கலக்கம்

ravan
- Advertisement -

கடந்த 2 போட்டிகளில் இந்திய அணிய துவக்கம் ரொம்ப மோசமாக இருந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் இரட்டை இலக்கத்தை கூட தொடாமல் வெளியேறினார். ஆனால் நாட்டிங்ஹாம்-ல் நடந்து வரும் 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக ஆடிவருகிறார்கள். குறிப்பாக, முதல் இன்னிங்சில் பந்து நன்றாக ஸ்விங் ஆகும் அதனை எதிர் கொண்டு 18.4 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்து நின்று 60 ரன்களை சேர்த்தனர். முதல் விக்கெட்டாக தவான் 35ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

dhawan

168 ரன்கள் முன்னிலை என்ற வலுவான நிலையில், இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்க்ஸை துவங்கியது. இந்த முறையும் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான துவக்கத்தை அளித்தனர். ஒருநாள் போட்டி போல் ஆடிய ராகுலும் தவனும் 11 ஓவர்களில் 60 ரன்களை சேர்த்தனர். 11.2 ஓவரில் 36 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் போலடாக்கி வெளியேறினார்.

- Advertisement -

இந்த இரண்டு இன்னிங்சிலும் ஆச்சரியமான ஒரு நிகழ்வு நடந்துள்ளது. அது என்னவென்றால், இரண்டு இன்னிங்சிலும் இந்திய அணியின் துவக்க ஜோடி 60 ரன்களை சேர்த்து முதல் விக்கெட்டை இழந்துள்ளது. ஒரே போட்டியின் இரண்டு இன்னிங்சிலும் ஒரு துவக்க ஜோடி இது போன்று ஒரே ரன்னில் விக்கெட்டை இழப்பது, ஒரு அரிதான நிகழ்வாகும். தற்போது நடந்துவரும் டெஸ்ட் போட்டியில் இந்த அதிசயம் ஏற்பட்டுள்ளது.

இந்திய அணி 3வது டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாளில் தற்போது ஆடி வருகிறது. மதிய உணவினை தண்டி இந்திய அணி விளையாடி வருகிறது. இதுவரை இந்திய அணி 225 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்துள்ளது. மேலும், 393 ரன்களுடன் முன்னிலையில் உள்ளது. எனவே இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

Advertisement