கோலியை துரத்திய ரசிகர்..! மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு..! – எதற்கு தெரியுமா..?

kholi
- Advertisement -

கிரிக்கெட் வீரர்களுக்கு நாளுக்கு நாள் பக்க்தர்கள் அதிகமாகி கொண்டே போகின்றனர். நடந்து வரும் ஐபிஎல் தொடரில் பல முறை ரசிகர்கள் தோனியின் கால்களில் விழுந்த விடியோகள் வெளியாகி கொண்டுதான் இருக்கிறது. தற்போது தோனியை தொடர்ந்து இந்திய வீரர் விராட்டிற்கும் பக்தர்கள் உருவாகி விட்டார்கள் போல.

kohli

- Advertisement -

நேற்று (மே 12 ) டெல்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டெல்லி பெங்களூர் அணிகள் மோதியது. டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் கோலி முதலில் பந்துவீச முடிவு செய்தார்.டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனார்.

பின்னர் 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டகாரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மோயீன் அலி 1 ரன்னிலும், பார்திவ் பட்டேல் 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் களமிறங்கிய கோலி, டிவில்லியர்ஸ் இணை ஆட்டத்தை டெல்லி கையில் இருந்து பறித்துவிட்டது. அதிரடியாக விளையாடிய கோலி 40 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கோலி – டிவில்லியர்ஸ் இணை மட்டும் 66 பந்துகளில் 118 ரன்கள் சேர்த்தது.

Virat Kohli’s Devotee entered The Ground! ❤❤

A post shared by SureshRaina3???? (@sureshraina.addicts) on

இந்த போட்டியில் விராட் பேட்டிங் செய்து கொண்டிருக்கும் போது ரசிகர் ஒருவர் மைதானத்தின் அனைத்து பாதுகாப்பையும் மீறி பேட்டிங் களத்தில் சென்று விராட் கோலியின் காலில் விழுந்தார். பின்னர் உடனடியாக அங்கு வந்த காவலர்கள் அவரை தர தரவென மைதானத்தில் இருந்து இழுத்து சென்றனர். இதோ அந்த வீடியோ தொகுப்பு.

Advertisement