கேலி செய்த இங்கிலாந்து வீரர்கள்..! மிரட்டல் பதிலடி கொடுத்த ஜாகிர்கான்.!

Zaher-khan
- Advertisement -

இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை கைப்பற்றியது. அதனை தொடர்ந்து நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இந்நிலையில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி துவங்கவுள்ளது.

Zaheer-Khan

- Advertisement -

இந்த தொடரில் இந்திய அணியில் 10 ஆண்டுகளுக்கு பின்னர் இடம்பிடித்துள்ளார் தினேஷ் கார்த்திக். 2007 ஆம் ஆண்டு டிராவிட் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து நாட்டிற்கு சுற்று பயணம் மேற்கொண்டது. அந்த தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்த தொடரின் போது இங்கிலாந்து அணி வீரர்கள் சிலர் இந்திய அணியின் சாகீர் கானை கிண்டல் செய்ததை குறித்து தினேஷ் கார்த்திக் நினைவு கூர்ந்துள்ளார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற தினேஷ் கார்த்திக் பேசுகையில் “10 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய டெஸ்ட் அணியில் விளையாடுவதை என்னும் போது மிகவும் பதட்டமாகவும் அதே சமயம் உற்சாகமாகவும் இருக்கிறது. எனக்கு ஞாபக மறதி சற்று அதிகம். ஆனால்,என்னால் ஒரு சில விடயங்களை மட்டும் நினைவு கூற முடிகிறது.

dinesh-karthick

இரு அணிகளுக்கும் அந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மிகவும் முக்கியமானதாக இருந்தது. ஒவ்வொரு போட்டியின் போதும் இரு அணி வீரர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. அப்போது டிரன்ட்பிரிட்ஜில் நடைபெற்ற போட்டியில் சாகீர் கானை ஆட்டமிழக்க வைக்க ஆடுகளத்தில் ஜெல்லி மிட்டாய்ககளை போட்டு கிண்டல் செய்தனர்.

இதனால் ஜாகீர் கானுக்கும் இங்கிலாந்து வீரர்களுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. ஆனால், அதன் பின்னர் அந்த போட்டியில் ஜாகீர் கான் 5 விக்கெட்டுகளை கைபற்றி இங்கிலாந்து வீரக்ளுக்கு பதிலடி கொடுத்தார். அந்த தொடரில் பெற்ற நினைவுகள் மறக்க முடியாது . நீண்ட வருட வருடங்களுக்கு பின்னர் இந்த நினைவுகளோடு இந்த தொடரில் விளையாடபோவது மிகவும் உற்சாகமாக உள்ளது.

Advertisement