ஒருநாள் அணிக்கு ரெய்னாவைவிட தினேஷ் கார்த்திக் பெஸ்ட் பிளேயர் ..! கம்பிர் அதிரடி கருத்து..! – காரணம் இதுதான்..?

karthik
- Advertisement -

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 கேந்த்ரா கணக்கில் வெற்றி பெற்றது. இதையடுத்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் ஒரு நாள் போட்டியில் இந்திய வீரர் சுரேஷ் ரெய்னாவை விட தினேஷ் கார்த்திக் சிறப்பான தேர்வாக இருப்பார் என்று இந்திய அணியின் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
rainasuresh
சமீபத்தில் இதுகுறித்து கௌதம் கம்பீர் தெரிவிக்கையில்” ஒரு நாள் போட்டி பொறுத்தவரை நான் சுரேஷ் ரெய்னாவிற்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கை தான் தேர்வு செய்திருப்பேன். சுரேஷ் ரெய்னா 50 ஓவர் போட்டிகளில் அதிரடியாக விளையாடலாம் ஆனால், என்னுடைய தேர்வு கண்டிப்பாக தினேஷ் கார்த்திக் தான். அவர் ஸ்பின் மற்றும் வேகப்பந்துகளை சிறப்பாக ஆடுவார். நேர்மையாக சொல்லப்போனால் அவர் சுரேஷ் ரெய்னாவை விட மிகவும் சிறப்பான தேர்வாக இருப்பார் என்பதே எனது கருத்து ” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கம்பீர் கூறிய இதே கருத்தை தான் இந்திய அணியின் முன்னாள் வீரரான அதிரடி பேட்ஸ்மேன் சேவாக்கும் தெரிவித்திருந்தார். சமீபத்தில் இது குறித்து பேசிய ஷேவாக்”சுரேஷ் ரெய்னாவிற்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று நான் உணர்கிறேன். அவர் நிதாஸ் கோப்பை போட்டிகளிலும் ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக விளையாடினர். அவர் தற்போது இந்திய அணியில் விளையாடுவதற்கு இது சிறப்பான தருணம்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
gautham gambir
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணியில் தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் அணியில் சேர்க்கப்ட்டும் அவருக்கு வாய்ப்பளிக்கபடமால் தான் இருக்கிறது. தற்போது இந்திய அணியின் மிடில் ஆர்டரில் ரெய்னா, கே எல் ராகுல் ஹர்திக் பாண்டியா உள்ளிட்டோர் சிறப்பாக விளையாடி வருவதால் இந்திய அணியில் தினேஷ் கார்திக்கிக்கிற்கு வாய்ப்பு அளிக்கப்படாமல் இருக்கிறது.

- Advertisement -
Advertisement