தோனிதான் இதற்கெல்லாம் காரணம்..! தோனியை கடுமையாக விமர்சித்த காம்பிர்..! – காரணம் இதுதான்..?

- Advertisement -

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 1-2 கணக்கில் தோல்வியடைந்துள்ளது. இந்த தொடரில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி மிகவும் மெத்தனமாக ஆடினார் என்று பல்வேறு குற்றசாட்டுக்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் தோனியின் ஆட்டம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர்களான கம்பீர் மற்றும் சாகீர் கான் கருத்து தெரிவித்துள்ளனர்.
sunil
மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் தோனி அவ்வளவாக ஜொலிக்கவில்லை. முதல் ஒரு நாள் போட்டியில் தோனிக்கு பேட்டிங் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டியில் விளையாடிய தோனி 37 மற்றும் 42 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். அதிலும் குறிப்பாக இரண்டாவது போட்டியில் தோனி மந்தமாக விளையாடினார் என்று பல்வேறு விமர்சங்களும் எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தோனியின் ஆட்டத்தை பற்றி சமீபத்தில் விமர்சித்த கௌதம் கம்பீர் கூறுகையில்”தோனி அதிக பந்துகளை டாட் ஆக்கி மற்ற பேட்ஸ் மேன்கள் மீது அழுத்தத்தை ஏற்படுத்தினார். இந்த இரண்டு ஆண்டுகளில் தோனி இப்படி மோசமாக விளையாடி நான் கண்டது இல்லை. அவர் ரன் குவிக்க நேரம் எடுத்துக் கொண்டாலும் இறுதியில் ரன் அடித்து விடுவார். ஓருவேளை அவர் 50 ஓவர் வரை நிலைத்து ஆடி இருந்தால் இந்திய அணி 280-290 ரன்களை எடுத்திருக்கும். நீங்கள் ரான் குவிக்க நேரம் எடுத்துக் கொண்டால் கடைசி ஓவர் வரை களத்தில் இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
gautham gambir
கம்பீரை தொடர்ந்து தோனியின் இந்த ஆட்டம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வேக பந்து வீச்சாளர் சாகீர் கான் கருத்து தெரிவிக்கையில் “கோலி மற்றும் ரைனாவின் இழப்பு தோனிக்கு பாதகமாக அமைந்தது. தோனி விக்கெட்டை பறிகொட்டுக்க கூடாது என்பதால் தான் மெதுவாக ஆடினார். அவர் நல்ல மன நிலையில் தான் ஆடினார். ஆனால், அணியில் அடுத்தடுத்து இரண்டு முக்கிய விக்கெட்கள் சரிந்ததால் அவர் மீது அழுத்தம் கூடிவிட்டது. அதனால் அவர் நினைத்தபடி நடக்வில்லை ” என்று தோனிக்கு ஆதரவாக பேசியுள்ளார்..

- Advertisement -
Advertisement