பேட்ட ரஜினி போன்று மரண மாஸாக ரெடியாகிய தல தோனி ட்ரெய்லர் – வைரல் வீடியோ

Dhoni Paraak
- Advertisement -

சென்னை சி.எஸ்.கே என்றாலே நம் நினைவுக்கு வருவது தல தோனி தான் நியாபகம் வரும் என்ற அளவுக்கு சென்னை அணியின் ரசிகர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் தோனி பிரசித்தம். தோனி கூட பலமுறை ராஞ்சியை அடுத்து தனது இரண்டாவது தாய் வீடு என்றால் அது தமிழ்நாடு தான் என்று பல மேடைகளில் கூறியுள்ளார்.

Dhoni

- Advertisement -

ஐ.பி.எல் துவக்க ஆண்டில் இருந்து சென்னை அணிக்காக ஆடிவந்த சென்னை அணி இடையில் ஓராண்டு தடை பெற்றபோதும் சென்னை அணி வீரர்கள் தோனியை மறக்கவில்லை. சென்னை ரசிகர்கள் அனைவரும் தோனி இடம்பெற்றிருந்த புனே அணியை ஆதரித்தனர். அந்த அளவிற்கு தோனி மீது சென்னை அணி ரசிகர்கள் அளவுகடந்த அன்பு வைத்திருப்பது நாம் அறிந்ததே.

சென்ற ஆண்டு மீண்டு வந்த சென்னை அணி கோப்பையை கைப்பற்றியது அப்போது கூட சென்னை ரசிகர்களுக்கு நன்றி கூறினார் தோனி. அதேபோல் இந்த வருடம் மீண்டும் சென்னை அணி கோப்பையை கைப்பற்றும் என்றும் ரசிகர்கள் கூறிவருகின்றனர். மேலும் தோணிக்காக பேட்டை படத்தில் ரஜினியின் ட்ரெய்லர் போன்று சென்னை அணிக்காக தோனிக்கு ட்ரெய்லர் ஒன்றை தயார் செய்துள்ளனர். இதோ அந்த வீடியோ :

சென்னை அணி குறித்தும், தோனி குறித்தும் நாளுக்கு நாள் வெளியாகும் அனைத்து வீடியோவும் இணையத்தில் ஹிட் அடிக்க தவறுவதில்லை. அந்த வகையில் இந்த வீடியோவும் இணையத்தில் சென்னை ரசிகர்களால் அதிக அளவு பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement