ஐபிஎல் தொடரில் நன்றாக விளையாடியதற்கு..! தோனியின் டிப்ஸ் தான் காரணம்..! – யார் தெரியுமா..?

deepak1
- Advertisement -

அடுத்த மாதம் இங்கிலாந்தில் நடக்குள்ள இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் போட்டியின் இந்திய A அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த அணியை வழிநடத்தும் பொறுப்பு இளம் வீரர்களுக்கு வழங்கப்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.இங்கிலாந்துக்கு எதிரான இந்தியா A அணியில் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை அணியில் விளையாடிய தீபக் சஹரும் இடம் பெற்றுள்ளார்.
deepak

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி மோதும் 4 ஒரு நாள் போட்டிகளுக்கும் மற்றும் இந்தியா A அணி -இங்கிலாந்து -வெஸ்ட் இண்டீஸ் மோதும் முத்தரப்பு போட்டிக்கும் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முத்தரப்பு போட்டி அடுத்த ஜூன் மதம் 22 ஆம் தேதி தொடங்கும். மேலும் அதன் பின்னர் இங்கிலாந்திற்கு எதிராக 4 ஒரு நாள் போட்டி கொண்ட தொடர் ஜூலை மாதம் 16 ஆம் தேதி தொடங்கவுள்ளது. மேலும் இந்த போட்டிகளில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் பொடிகலிக்கான அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு நாள் போட்டியில் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் செயல்படுவார் என்றும் டெஸ்ட் போட்டியின் கேப்டனாக கருண் நாயர் செயல் படுவார் என்றும் எம்.எஸ்.கே பிரசாத் தலைமையிலான தேர்வுக்கு குழு அறிவித்துள்ளது. சமீபத்தில் இந்த அணியில் இடம்பெற்றுள்ள தீபக் சஹர் தெரிவிக்கையில்”நான் என்னுடைய பிட்னெஸ் குறித்து கவனம் செலுத்தி வருகிறேன். என்னுடைய செயல் திறனும், நம்பிக்கையும் சிறப்பாக தான் உள்ளது அதானால் நான் என்னுடைய பிட்னெசில் கவனம் செலுத்த வேண்டும். நான் இன்று தான் ஆக்ராவில் உள்ள எனது சொந்த வீட்டிக்கு திரும்பியுள்ளேன்.
dhoni4
எனக்கு இன்னும் இரு தினங்கள் மட்டுமே ஒய்வு இருக்கும். அதன் பிறகு வரும் ஜூன் மாதம் நடக்க உள்ள உடல் தகுதி தேர்வில் பங்கு பெற வேண்டும். கடந்த 5 மாதங்களாக நாங்கள் 4 ஓவர்கள் போட மட்டுமே பயிற்சி எடுத்து வந்தோம். ஆனால் இங்கிலாந்து தொடரில் விளையாட இருப்பதால் 10 ஓவர்களுக்கான பயிற்சியை எடுக்க வேண்டும். இன்னும் சில பயிச்சிகளும் இருக்கும். இப்போதைக்கு நாங்கள் எங்களது பிட்னெஸ் குறித்து மட்டுமே யோசிக்க வேண்டும் ” என்று தெரிவித்துள்ளார்.”

Advertisement